குஜராத் உள்பட 6 மாநில சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட உள்ளது என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் அக்கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டன. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கெஜ்ரிவால்,
அடுத்த 2 ஆண்டுகளில் உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், இமாசல பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய 6 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என்று தெரிவித்தார்.