சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.48 குறைந்து, சவரன் ரூ.35,328-க்கு விற்பனையாகிறது.
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தங்கம் விலை, பெரும்பாலும் இறங்குமுகமாகவே இருக்கிறது. ஒரு சில நாட்கள் அதிகரித்தாலும், தங்கம் விலையில் பெரிதளவு மாற்றம் ஏற்படவில்லை. இதற்கு முக்கிய காரணம், தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்தது தான்.
பொதுமுடக்க காலத்தில் முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை பாதுகாக்க, தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்தனர். இது தங்கத்தின் தேவையை அதிகரித்து, விலையை எதிர்பாராத அளவுக்கு ஏற்றமடையச் செய்தது.
முதலீட்டாளர்கள் தற்போது மீண்டும் முதலீடுகளை ஷேர் மார்க்கெட், அமெரிக்க டாலர்கள் பக்கம் திசை திருப்பி இருப்பதால், தங்கம் விலை கணிசமாக குறைந்து வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.48 குறைந்து ரூ.4,416 க்கு விற்பனையாகிறது. அதன்படி சவரனுக்கு ரூ.384 குறைந்து ரூ.35,328க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 90 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.74.10க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.74,100க்கும் விற்பனையாகிறது.