ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் - கரட்சேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்

வெள்ளிக்கிழமை, 19 பெப்ரவரி 2021      விளையாட்டு
Djokovic-2021-02-19

Source: provided

மெல்போர்ன் : கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), தரவரிசையில் 114-வது இடத்தில் இருப்பவரும், தகுதி சுற்றின் மூலம் முன்னேறி கிராண்ட்ஸ்லாம் போட்டியின் பிரதான சுற்றில் முதல்முறையாக அடியெடுத்து வைத்தவருமான ரஷ்யாவின் அஸ்லான் கரட்செவை சந்தித்தார்.

தொடக்கம் முதல் அதிரடியாக ஆடிய ஜோகோவிச் முதல் செட்டை6-3 என கைப்பற்றினார். அடுத்த இரு செட்களையும் 6-4, 6-2 என கைப்பற்றி அசத்தினார்.

இறுதியில், கரட்சேவை 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வீழ்த்தி ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து