முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டென்னிஸ் போட்டி தரவரிசையில் தொடர்ந்து முதலிடம்: ரோஜர் பெடரர் சாதனையை முறியடித்தார் ஜோகோவிச்

திங்கட்கிழமை, 22 பெப்ரவரி 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மெல்போர்ன் : கிராண்ட் சிலாம் டென்னிஸ் போட்டி தரவரிசையில் தொடர்ந்து 311-வது வாரமாக ‘நம்பர்ஒன்’ இடம் பிடித்தன் மூல் முந்தைய ரோஜர் பெடரர் சாதனையை ஜோகோவிச் முறியடித்துள்ளார்.

கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில் உலகில் முதல் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) 7-5, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ரசியாவை சேர்ந்த 4-ம் நிலை வீரரான மெட்வதேவை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.

33 வயதான ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 9-வது முறையாக கைப்பற்றினார். இதற்கு முன்பு 2008, 2011, 2012, 2013, 2015, 2016, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் வெற்றி பெற்று இருந்தார். அவர் 9 முறை இறுதிப்போட்டிக்கு வந்து அனைத்திலும் பட்டம் வென்று சாதித்து உள்ளார். இதன்மூலம் ஆஸ்திரேலிய ஓபனில் தனக்கு நிகரான வீரர் யாரும் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து உள்ளார்.

ஜோகோவிச் கைப்பற்றிய 18-வது கிராண்ட் சிலாம் பட்டம் இதுவாகும். இதன்மூலம் அவர் முதல் இடத்தில் இருக்கும் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ரபெல் நடால் (ஸ்பெயின்) ஆகியோரை நெருங்கி உள்ளார். இருவரும் 20 கிராண்ட்சிலாம் பட்டங்களை வென்று உள்ளார். அவர்கள் நிலையை அடைய ஜோகோவிச்சுக்கு இன்னும் 2 கிராண்ட்சிலாம் பட்டங்களே தேவை.

அவர் ஆஸ்திரேலிய ஓப்பனை 9 முறையும், பிரெஞ்சு ஓபனை ஒரு தடவையும், விம்பிள்டன் பட்டத்தை 5 முறையும், அமெரிக்க ஓபனை 3 முறையும் வென்று உள்ளார். ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றதன் மூலம் ஜோகோவிச் தொடர்ந்து நம்பர் ஒன் இடத்தில் நீடிக்கிறார். அவர் 311-வது வாரமாக நம்பர்-1 வரிசையில் உள்ளார். இதன்மூலம் அவர் ரோஜர் பெடரர் சாதனையை முறியடித்தார். பெடரர் 310 வாரங்கள் டென்னிஸ் தர வரிசைப்பட்டியலில் நம்பர்ஒன் இடத்தில் இருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து