முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்மா மினி கிளினிக்குகளுக்கு 144 கோடி ரூபாய் ஒதுக்கீடு: இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 23 பெப்ரவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : இடைக்கால வரவு - செலவுத் திட்ட மதிப்பீடுகளில் அம்மா மினி கிளினிக்குகளுக்காக 144 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட்டை  தாக்கல் செய்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் அத்தியாவசிய ஆரம்ப சுகாதார சேவைகளை வழங்குவதற்காக, படிப்படியாகத் தொடங்கப்படும் 2,000 அம்மா மினி கிளினிக்குகள் சுகாதார வசதிகளை மேலும் மேம்படுத்தும் விதமாக அமையும். இடைக்கால வரவு - செலவுத் திட்ட மதிப்பீடுகளில் அம்மா மினி கிளினிக்குகளுக்காக 144 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

3,995 கோடி ரூபாய் மதிப்பில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்படுவதன் மூலம், 2021-22-ம் கல்வியாண்டில் கூடுதலாக 1,650 மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2021-22-ம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்காக 2,470.93 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையின் நிதியுதவியுடன், மொத்தம் 1,634 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தமிழ்நாடு நகர்ப்புற சுகாதாரத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2021-22-ம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், இத்திட்டத்திற்காக 815.70 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைக்கான ஒதுக்கீடு, 2020-21-ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில், 15,863.37 கோடி ரூபாயிலிருந்து 2020-21 திருத்த மதிப்பீடுகளில் 18,458.27 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 

மேலும், இந்த ஒதுக்கீட்டை உயர்த்தி, 2021-22-ம் ஆண்டிற்கான இடைக்கால வரவு - செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 19,420.54 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  தற்போது வாரியங்களில் 26,67,355 தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டு, 2011-ம் ஆண்டு முதல் இன்றைய நாள் வரையில், புலம் பெயர் தொழிலாளர்கள் உட்பட 84,32,473 பயனாளிகளுக்கு, நல நிதி உதவியாக 2,219.70 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.  இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து