புதிய கட்சி தொடங்கினார் நடிகர் மன்சூர் அலிகான்

வியாழக்கிழமை, 25 பெப்ரவரி 2021      அரசியல்
Mansoor-Ali-Khan-2021-02-25

நடிகர் மன்சூர் அலிகான் தமிழ் தேசிய புலிகள் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை நேற்று தொடங்கினார். 

சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்த நடிகர் மன்சூர் அலிகான், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியிலிருந்து விலகி தமிழ் தேசிய புலிகள் என்கிற கட்சியைத் தொடங்கியுள்ளார்.  சீமான் நாம் தமிழர் என்கிற கட்சியைத் தொடங்கி, பல தேர்தல்களில் தனித்து நின்று களம் கண்டு வருகிறார். சீமானின் பேச்சால் ஈர்க்கப்பட்டு அவரது கட்சியில் இணைந்த நடிகர் மன்சூர் அலிகான், கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டார். 

இந்நிலையில் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட மன்சூர் அலிகான் ஆசைப்பட்டதாகவும், அதற்கு அவரது கோரிக்கையை சீமான் பரிசீலிக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து அவர் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகினார்.

புதிதாகக் கட்சியையும் தொடங்கிய அவர் தனது கட்சிக்கு தமிழ் தேசிய புலிகள் எனப் பெயரிட்டுள்ளார். புதிய கட்சியைத் தொடங்கியுள்ள மன்சூர் அலிகான் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவார் எனத் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து