விஜய் ஹசாரே கோப்பை: இரட்டை சதம் விளாசி பிருத்வி ஷா சாதனை

வியாழக்கிழமை, 25 பெப்ரவரி 2021      விளையாட்டு
Prithvi-Shaw-2021-02-25

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர்களில் ஒருவர் பிருத்வி ஷா. தற்போது டொமெஸ்டிக் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். புதுச்சேரி அணிக்கு எதிராக ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களம் இறங்கிய அவர் 152 பந்துகளில் 227 ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளார். இதில் 31 பவுண்டரிகளும், 5 சிக்சரும் அடங்கும். இதன் மூலம் விஜய் ஹசாரே கோப்பையில் ஒரு பேட்ஸ்மேன் அடித்த அதிகபட்ச ரன் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். 

மும்பை அணியை பிருத்வி வழிநடத்தி வருகிறார். அண்மையில் முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஷா இடம்பெற்றிருந்தார். இருப்பினும் சரியாக விளையாடாததால் அணியிலிருந்து கழட்டி விடப்பட்டார். இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம் இழந்த ஃபார்மை மீட்டுள்ளார் அவர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து