முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எச்1பி விசா தடையை நீக்குவது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை: ஜோபைடன் நிர்வாகம் விளக்கம்

புதன்கிழமை, 3 மார்ச் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில், அந்த நாட்டின் பொருளாதாரத்தை புதுப்பிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக குடியேற்றமற்ற எச்1பி விசாக்கள், குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்கள், பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கான சில வகை வேலை விசாக்களை நிறுத்தி வைத்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் அப்போதைய ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டிருந்தார். 

அமெரிக்கா்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் நோக்கில் கடந்த டிசம்பா் வரை எச்1 பி விசா வழங்கப்படாது என்று அமெரிக்க அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிவித்தது. பின்னர் அந்த தடை மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள பைடன் அரசு முதல் நாளில் இருந்தே டிரம்ப் அரசு விதித்து வந்த பல்வேறு கட்டுப்பாடுகள் உத்தரவுகளை ரத்துச் செய்து வருகிறது. குறிப்பாகப் பதவியேற்ற சில மணி நேரத்தில் எல்லை சுவர் கட்டுவதற்கான நிதி உதவியைத் தடை செய்தது, அரபு நாடுகள் மீது விதிக்கப்பட்ட அனுமதி கட்டுப்பாடுககளை ரத்து செய்தது போன்ற அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். 

இதனைத்தொடர்ந்து டிரம்ப் அரசு விதித்த எச்4 விசா கட்டுப்பாடுகள் நீக்கம், பழைய லாட்டரி முறையை மீண்டும் அமலாக்கம் செய்தது, கிரீன் கார்டு விண்ணப்பம் செய்த ஹெச்1பி விசா உரிமையாளர்கள் மீது விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கியது, சம்பளத்தின் அடிப்படையில் எச்1 பி விசா வழங்கும் முறையை ஜோ பைடன் அரசு. ரத்து செய்தது. 

இந்நிலையில் எச்1பி விசா தடையை நீக்குவது தொடர்பாக இன்னும் முடிவெடுக்கவில்லை என்று ஜோ பைடன் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து