முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

6 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு: பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி ஒத்திவைப்பு

வியாழக்கிழமை, 4 மார்ச் 2021      விளையாட்டு
Image Unavailable

சில வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் 6-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 (பிஎஸ்எல்) போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வருட பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் பங்கேற்ற ஏழு பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் ஆறு பேர் வீரர்கள். இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் அணி உரிமையாளர்களும் கலந்து பேசி, பிஎஸ்எல் போட்டியை ஒத்திவைப்பது என முடிவெடுத்துள்ளார்கள்.  

இந்த வருட பிஎஸ்எல் போட்டியின் 34 ஆட்டங்களில் 14 ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து ஆட்டங்களும் கராச்சி மற்றும் லாகூரில் நடைபெற இருந்தன. முதல் 20 ஆட்டங்கள் கராச்சியிலும் மீதமுள்ள 10 லீக் ஆட்டங்களும் நான்கு பிளேஆஃப் ஆட்டங்களும் லாகூரில் நடைபெற இருந்தன. கொரோனா பாதுகாப்பு வளையத்தில் அணியின் வீரர்களும் பயிற்சியாளர்களும் இருந்தபோதும் ஏழு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

போட்டி தொடங்கும் முன்பு லாகூர் அணியைச் சேர்ந்த ஒரு வீரர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதேபோல பெஸாவர் அணியின் பயிற்சியாளர் டேரன் சமியும் கேப்டன் வஹாப் ரியாஸும் கொரோனா பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறி தங்களுடைய அணியின் உரிமையாளரைச் சந்தித்தார்கள். இதையடுத்து இருவருக்கும் இருமுறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பிறகுதான் அவர்கள் மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டார்கள்.

ஏழு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேன் கிறிஸ்டியன், போட்டியை விட்டு வெளியேற முடிவெடுத்தார். இதையடுத்து பிஎஸ்எல் போட்டி ஒத்திவைக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து