முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2036-ம் ஆண்டு வரை பதவியில் நீடிப்பதற்கான புதிய மசோதா : ரஷ்ய அதிபர் புடின் கையெழுத்து

செவ்வாய்க்கிழமை, 6 ஏப்ரல் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

மாஸ்கோ : ரஷ்ய அதிபர் புடின் அடுத்த 2 முறை பதவியில் நீடிப்பதற்கான மசோதாவில் கையெழுத்திட்டு உள்ளார்.

ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புடின் (வயது 68) இருந்து வருகிறார். கடந்த இரு தசாப்தங்களாக பதவியில் நீடித்து வரும் புடின் புதிய சட்ட மசோதா ஒன்றில் கையெழுத்திட்டு உள்ளார்.

இதன்படி, அவர் தலா 6 ஆண்டுகள் என கூடுதலாக 2 முறை பதவியில் நீடிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இதனால், வருகிற 2036 - ம் ஆண்டு வரை அவர் ஆட்சி அதிகாரத்தில் இருக்க முடியும். கடந்த ஆண்டு நடந்த அரசியலமைப்பு சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக இந்த மசோதாவை அவர் முன்மொழிந்து உள்ளார். இதற்கு கடந்த ஜூலையில் மக்கள் பெரும் ஆதரவு அளித்தனர்.

கடந்த மாதம் இந்த புதிய மசோதாவுக்கு உறுப்பினர்களும் ஒப்புதல் வழங்கினர். இதனை தொடர்ந்து, வருகிற 2024 - ம் ஆண்டு அவரது பதவி காலம் முடிவடைந்த உடன் மீண்டும் அதிபர் தேர்தலில் அவர் போட்டியிட அனுமதி கிடைத்து உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து