முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோனியின் ஸ்பை அனிமேஷன் தொடர்

புதன்கிழமை, 7 ஏப்ரல் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி ,'கேப்டன் 7' என்ற டைட்டிலில் புது அனிமேஷன் தொடர் ஒன்றை தயாரிக்கவுள்ளார். பல ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் டோனி இந்த 7 எண் பதித்த ஜெர்சியை அணிந்திருந்தார். உளவு தொடரான இந்த ‘கேப்டன் 7’ தற்போது ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளில் இருக்கிறது.

இந்தத் தொடரின் முதல் சீசன், இந்தியாவின் முன்னாள் கேப்டனை அடிப்படையாகக் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷி டோனியின் தயாரிப்பு நிறுவனமான டோனி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் பிளாக் ஒயிட் ஆரஞ்சு பிராண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் ஒரு கூட்டு முயற்சிதான் 'கேப்டன் 7' என்று தெரிவித்துள்ளார் சாக்‌ஷி.

இந்தியாவின் முதல் கற்பனை கதை கலந்த உளவு அனிமேஷன் தொடர் எனக் கருதப்படும், இந்த தொடர் அடுத்த ஆண்டு முதல் சீசனுடன் தொடங்கவிருக்கிறது. இதுகுறித்து சாக்‌ஷி டோனி கூறுகையில், 'கேப்டன் 7' சாகசங்கள் நிறைந்த ஒரு நிகழ்ச்சியாக இருக்கும். இந்த தொடர் உலகம் முழுவதும் உள்ள ஆன்லைன் ஓடிடி தளங்களில் வெளியாகும்' என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து