முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா 2-ம் அலை எதிரொலி: புதிய கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்ற கவர்னர் பன்வாரிலால் அறிவுறுத்தல்

வியாழக்கிழமை, 8 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

கொரோனா தடுப்பு விதிமுறைகளை தமிழக மக்கள் பின்பற்ற கவர்னர் பன்வாரிலால் புரோகித் அறிவுறுத்தியுள்ளார். 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவலின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே பரவிய கொரோனா முதல் அலை ஓரளவு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், இரண்டாவது அலையானது ஒரு நாள் பாதிப்பில் ஒரு லட்சத்துக்கு மேல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  புதியதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மக்களிடையே மீண்டும் அச்சம் நிலவி வருகிறது.

இதற்கிடையே, தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு நேற்று அறிவித்தது. இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த அரசின் விதிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்ட அறிக்கையில், 

கொரோனா பாதிப்பின் 2-வது அலையால் மிகப்பெரும் மருத்துவ நெருக்கடியை இந்தியா சந்தித்து வருகிறது. கொரோனா தொற்றில் இருந்து மக்கள் தங்களையும், தங்கள் குடும்பத்தையும் காக்க வேண்டும்.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதுடன், சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும். தகுதி உடையவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா 2-ம் அலை காரணமாக முதியவர்களை குடும்பத்தினர் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளவும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து