முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்கத்தின் வடக்கு பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவோம்: மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு

வெள்ளிக்கிழமை, 9 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

கொல்கத்தா : மேற்குவங்காளத்தின் வடக்கு பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். 

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 3 கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ளது. எஞ்சிய 5 கட்டங்களுக்கு முறையே ஏப்ரல் 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2- ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், அம்மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் பா.ஜ.க. மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்திற்கு பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

கடந்த 3 கட்ட தேர்தலை பார்க்கும் போது மேற்குவங்காள மக்கள் பா.ஜ.க.வுக்கு எதிர்பாராத அளவிற்கு ஆதரவு அளித்துள்ளனர். 3 கட்ட தேர்தலில் பா.ஜ.க 63 முதல் 68 வரையிலான இடங்களில் வெற்றிபெறும். தங்க வங்காளம் கொல்கத்தாவில் இருந்து தொடங்கும். மகிழ்ச்சியின் நகரமாக கொல்கத்தா தொடர்ந்து திகழும். அதை எதிர்கால நகரமாக மாற்ற நாங்கள் நடவடிக்கை எடுப்போம். உள்கட்டமைப்பு வசதிகளை வலிமைபடுத்த 22 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கொல்கத்தா வளர்ச்சி நிதியை உருவாக்குவோம். 

திரிணாமுல் காங்கிரஸ் மிகவும் வெறுப்புடன் உள்ளது என்பது அவர்களின் பேச்சு மற்றும் நடவடிக்கையில் தெரியவந்துள்ளது. பணியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் குறித்து ஒரு தலைவரோ அல்லது முதல்வரோ இது போன்ற கருத்துக்களை கூறியதில்லை. மக்கள் அராஜகத்தில் ஈடுபடவேண்டும் என்று மம்தா முயற்சிக்கிறாரா? எனக்கு புரியவில்லை.

தேர்தல் பணிக்காக மத்திய பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்படும்போது அது உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வராது. அது தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும்.  சிறுபான்மை சமூகத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து திரிணாமுல் காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ள நிகழ்வு அவர்களின் சிறுபான்மை சமூக வாக்கு வங்கியும் சிதறிவருகிறது என்பதை காட்டுகிறது.   

எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் மத்திய அரசின் பல்கலைக் கழகத்தை வடங்கு மேற்குவங்காளத்தில் நாங்கள் கட்டுவோம். பட்டியலின பழங்குடியின மக்களை கூர்கா சமூகமாக அங்கீகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நாட்டில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது என்ற தகவல் தவறானது. தேவையான அளவுக்கு கொரோனா தடுப்பூசிகள் அனைத்து மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து