முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல்காந்தி ஏன் இன்னும் தடுப்பூசி போடவில்லை? ரவிசங்கர் கேள்வி

ஞாயிற்றுக்கிழமை, 11 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் சில மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருவது மிகவும் கவலை அளிக்கும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது.

ஆனால் மத்திய அரசு இந்திய மக்கள் அனைவருக்கும் தடுப்பூசியை செலுத்த அனுமதிக்காமல் வெளிநாடுகளுக்கு அவற்றை ஏற்றுமதி செய்து வருவதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் ராகுலுக்கு பதிலளிக்கும் விதமாக மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

பகுதி நேர அரசியல்வாதியாக தோல்வியடைந்துள்ள ராகுல் காந்தி தற்போது முழுநேர பரப்புரையாளராக மாறி உள்ளார். வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறி மருந்து நிறுவனங்களுக்கு தற்போது அவர் பரப்புரை செய்கிறார். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சுகாதாரத்துறை பராமரிப்புக்கான அடிப்படை உள்கட்டமைப்புகளுக்கு தட்டுப்பாடு இருக்கிறதே தவிர கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என்பதை ராகுல் காந்தி தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு எந்த பற்றாக்குறையும் இல்லை. ஆனால் ராகுல் கவனம் செலுத்துவதில் தான் பற்றாக்குறை உள்ளது. ராகுல் காந்தி ஏன் இன்னும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை?. அவர் கொரோனா தடுப்பூசி போட விரும்பவில்லையா? அல்லது பல வெளிநாட்டு பயணங்களின் போது அங்கு எங்காவது ராகுல்காந்தி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டாரா? அல்லது அதுபற்றி வெளியிட விரும்பவில்லையா? என கேள்வி எழுப்பி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து