முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெடுங்காடு காங்கிரஸ் வேட்பாளருக்கு கொரோனா

ஞாயிற்றுக்கிழமை, 11 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

காரைக்கால் : காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு (தனி) சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், சட்டசபை முன்னாள் உறுப்பினருமான ஏ.மாரிமுத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

புதுச்சேரி சட்டசபை தேர்தல் கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. முன்னதாக தமது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மற்றும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்புப் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார்.

தேர்தல் பணிகள் நிறைவடைந்த நிலையில், காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் நேற்று அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையொட்டி அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அவர் ஆரோக்கியமாக இருப்பதாக அவரது மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து