முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒடிசாவில் 15 அடி கிணற்றில் விழுந்த குட்டி யானை மீட்பு

செவ்வாய்க்கிழமை, 13 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

15 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறுதலாக விழுந்த யானைக்குட்டி பத்திரமாக மீட்கப்பட்டது.

ஒடிசா மாநிலத்தில், மயூர் பஞ்ச் மாவட்டத்தின், வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமத்திற்கு, யானைக்குட்டி ஒன்று இரவு நேரத்தில் உணவு தேடி வந்துள்ளது. அப்போது அந்த யானை குட்டி, 15 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறுதலாக விழுந்துள்ளது.

யானைக் குட்டியின் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர், யானைக்குட்டியை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இதனையடுத்து பல மணி நேர போராட்டத்துக்கு பின் யானைக்குட்டி பத்திரமாக மீட்கப்பட்டது. இந்த யானை குட்டி வனப்பகுதிக்குள் விடப்பட்ட நிலையில், அதன் நடவடிக்கைகள் தொடர்ந்து கவனிக்கப்படும் என்று ஒடிசா மாநில வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து