முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

20 பந்துகளில் அரைசதம்: தீபக் ஹூடாவை புகழ்ந்த இர்பான் பதான்

செவ்வாய்க்கிழமை, 13 ஏப்ரல் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : “நீங்கள் பின்வாங்காமல் இருப்பது எப்படி என கற்றுக்கொள்ள விரும்பினால், தீபக் ஹூடாவின் கதையை படித்து, இரவு பேட் செய்ததை பாருங்கள்” என இர்பான் பதான் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். 

ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வீரரான தீபக் ஹூடா 28 பந்துகளில் 64 ரன்கள் விளாசி அதிரடியை காட்டினார். 20 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.ஐ.பி.எல் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தேர்வாகாத டொமெஸ்டிக் கிரிக்கெட்டர் அடித்த அதிகவேக அரைசதமாக இது பதிவானது. 

இந்நிலையில், “நீங்கள் பின்வாங்காமல் இருப்பது எப்படி என கற்றுக்கொள்ள விரும்பினால், தீபக் ஹூடாவின் கடந்த சில மாதங்களின் கதையை படித்து, இரவு பேட் செய்ததை பாருங்கள்.. நன்றாக விளையாடினீர்கள் நண்பா..” என இர்பான் பதான் ட்வீட் செய்துள்ளார்.

முன்னதாக சையத் முஷ்டாக் அலி தொடரில் தான் சந்தித்த அவமானங்களுக்கு இந்த அரைசதம் மூலம் பதிலடி கொடுத்துள்ளார் ஹூடா. பரோடா அணிக்காக கடந்த 11 வருடங்களாக விளையாடிவருகிறார். அந்த அணியின் துணை கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது. பரோடா அணியின் கேப்டனாக க்ருணால் பாண்டியா இருக்கிறார். சையத் முஸ்தாக் அலி தொடரின் போது க்ருணால் பாண்டியா, ஹூடாவை தரக்குறைவாக வார்த்தைகளில் பேசியதாக தெரிகிறது. இதனையடுத்து கடிதம் ஒன்றை வெளியிட்டார் 

ஹூடா வெளியிட்ட கடிதத்தில், ‘ பரோடா அணிக்காக கடந்த 11 வருடங்களாக விளையாடி வருகிறேன். இந்த ஆண்டு சையத் முஷ்டாக் அலி டி-20 தொடரில் பரோடா அணிக்கு விளையாட தேர்வாகியுள்ளேன். நான் இப்போது மனஅழுத்தத்தாலும், மன உளைச்சலாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன். கடந்த சில நாட்களாக அணியின் கேப்டன் க்ருணால் பாண்டியா சக வீரர்கள் முன்பும், மற்ற அணி வீரர்கள் முன்பும் தகாத வார்த்தைகளால் திட்டி வருகிறார். என அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இது உள்ளூர் கிரிக்கெட் தொடரில் புயலைக் கிளப்பியது. இதுகுறித்து விசாரித்த பரோடா கிரிக்கெட் நிர்வாகம் என்னத்தான் இருந்தாலும் ஹூடா கடிதம் வெளியிட்டது தவறு. அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட தடை விதிப்பதாக அறிவித்தது. 

இந்த அறிவிப்பு வெளியானபோது ஹூடாவுக்கு ஆதரவாக இர்பான் பதான் கருத்துகளை தெரிவித்திருந்தார். இர்பான் பதான் பரோடா அணிக்காக 17 ஆண்டுகளாக விளையாடியுள்ளார். “இடைநீக்கம் போன்ற சம்பவம் ஒரு வீரருக்கும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அதை தவிர்க்க வேண்டும். கொரோனா போன்ற கடினமான காலங்களில் ஒரு வீரரின் மன ஆரோக்கியம் மிகவும் முக்கியமானதாகும். அவர் விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து