முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடுதலாக 20 லட்சம் கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

வியாழக்கிழமை, 15 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

தமிழகத்திற்கு கூடுதலாக கொரோனா தடுப்பூசிகளை வழங்க கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா 2- வது அலை தற்போது வேகமாக பரவி வருவதால், 45 வயதிற்கு மேல் உள்ள  அனைவருக்கும் 100 சதவீத தடுப்பூசி போடும் வகையில், கடந்த 14-ம் தேதி முதல் இன்று 16-ம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி திருவிழா நடத்தப்படுகிறது. அந்தந்த மாவட்டத்தில் தடுப்பூசி திருவிழா என்று அறிவித்து தகுதி  வாய்ந்த நபர்களுக்குத் தடுப்பூசி போடும் பணியில் சுகாதாரத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 

அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட 1900 மினி கிளினிக்குகள், தடுப்பூசி  செலுத்த அனுமதி பெற்ற தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 4328 மையங்களில் கோவிட் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், தமிழகத்திற்கு கூடுதலாக கொரோனா தடுப்பூசிகளை வழங்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடித்தில், தமிழகத்திற்கு கூடுதலாக கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டும். கூடுதலாக 15 லட்சம்  கோவிஷீல்டு, 5 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுவரை சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் 10 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  சென்னையில் உள்ள 80 லட்சம் பேரில் 45 வயதுக்கு மேற்பட்டோர் 22 லட்சம் பேர் உள்ளனர். இதில் 42 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. விரைவில் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்கும் பணி நடந்து வருகிறது.

தமிழகத்தில் ஜனவரி மாதம் தடுப்பூசி போடப்பட்ட போது 600 மையங்களில் தொடங்கப்பட்ட பணி தற்போது படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு 4,328 என்ற எண்ணிக்கை அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து, பணிபுரியும் தொழில்  நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றிலும் தடுப்பூசி முகாம்களை நடத்த சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து