முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேக்ஸ்வெல் - டிவில்லியர்ஸ் அதிரடி: கொல்கத்தா அணியை வீழ்த்தி பெங்களூரு ஹாட்ரிக் வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 18 ஏப்ரல் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சென்னை : மேக்ஸ்வெல் - டிவில்லியர்ஸ் அதிரடியால் கொல்கத்தா அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி தனது ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு ஐ.பி.எல் சீசனின் 10-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நேற்று விளையாடின. டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் கோலி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்தது பெங்களூர் அணி. 

அந்த அணிக்காக தேவ்தத் படிக்கல் மற்றும் விராட் கோலி இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். ஆட்டத்தின் 2-வது ஓவரிலேயே கோலி மற்றும் ராஜாத் பட்டிதார் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது பெங்களூரு. அந்த ஓவரை வருண் சக்கரவர்த்தி வீசி இருந்தார். பின்னர் வந்த மேக்ஸ்வெல், படிக்கலுடன் 86 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார். இருப்பினும் படிக்கல் 28 பந்துகளுக்கு 25 ரன்களில் அவுட்டானார். பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து 360 டிகிரி பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் களத்திற்கு வந்தார். மேக்ஸ்வெல் - டிவில்லியர்ஸ் இணையர் 53 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். மேக்ஸ்வெல் 49 பந்துகளில் 78 ரன்களை குவித்து அவுட்டானார். அவரது இன்னிங்க்ஸில் 9 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். கம்மின்ஸ் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தார்.

பின்னர் ஜேமிசன் களத்திற்கு வந்தார். டிவில்லியர்ஸ் அதிரடியாக விளையாடி 34 பந்துகளில் 76 ரன்களை குவித்து இறுதி வரை நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அதோடு ஜேமிசன் - டிவில்லியர்ஸ் 56 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர்.   

இதையடுத்து 205 ரன் இலக்கை விரட்ட களமிறங்கிய கொல்கத்தா அணி 15 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்களை எடுத்து திணறியது. முன்னதாக தொடக்க ஆட்டக்காரர்களான ராணா (18) மற்றும் கில் (21) ரன்களில் ஆட்டமிழந்தனர். திரிபாதி (25), மோர்கன் (29), கார்த்திக் (2), ஹசன் (26), ரஸ்செல் (31), கம்மின்ஸ் (6) ரன்கள் எடுத்து வெளியேறினர்.  ஹர்பஜன் சிங் (2) மற்றும் சக்ரவர்த்தி (2) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்களே எடுத்தது. இதனை அடுத்து, ஐ.பி.எல். போட்டியின் நேற்றைய 10-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து