முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலாஜியை தொடர்ந்து 4-வதாக 'சி.எஸ்.கே' பேட்டிங் பயிற்சியாளர் ஹஸ்ஸிக்கு கொரோனா பாதிப்பு

புதன்கிழமை, 5 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : சி.எஸ்.கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இவரை சேர்த்து சென்னை அணியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளாக உயர்ந்துள்ளது.

சி.எஸ்.கே அணிக்கு முன்பு ஆடிய, இப்போதைய பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸிக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தும் சில வீரா்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஐ.பி.எல் 2021 போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சி.எஸ்.கே பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனாவின் லேசான அறிகுறிகள் இருந்தாலும் டெல்லியில் உள்ள தங்கும் விடுதியில் 10 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

சென்னை அணியுடன் பயோ பபுளில் இருந்த பவுலிங் பயிற்சியாளர் பாலாஜி, காசி விஸ்வநாதன் மற்றும் பேருந்து சேவை பணியாளர் ஒருவருக்கு தொற்று உறுதியாகிய நிலையில் நான்காவதாக மைக் ஹஸ்ஸி பாதிக்கப்பட்டுள்ளார். அவர் டெல்லியில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அவர் ஆஸ்திரேலியா பறப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. 

நோய் தொற்று பாதிப்பிலிருந்து அவர் மீண்டதும் மாலத்தீவு வழியாக ஹஸ்ஸி அவரது தாய் நாட்டிற்கு திரும்புவார். அதற்கான பணிகளை சென்னை அணி நிர்வாகம் கவனித்துக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக கொல்கத்தா நைட் ரைடா்ஸ் வீரா்கள் வருண் சக்கரவா்த்தி, சந்தீப் வாரியா் ஆகியோருக்கும், சென்னையின் பந்துவீச்சுப் பயிற்சியாளா் எல்.பாலாஜிக்கும் கொரோனா உறுதியான நிலையில், டெல்லி கேபிடல்ஸ் வீரா் அமித் மிஸ்ரா, சன்ரைசா்ஸ் ஹைதராபாத் வீரா் ரித்திமான் சாஹா ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து