முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணகிரி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொரோனா தொற்றுக்கு பலி

செவ்வாய்க்கிழமை, 11 மே 2021      தமிழகம்
Image Unavailable

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள சம்பவம் கிருஷ்ணகிரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள சம்பவம் கிருஷ்ணகிரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மேல் சோமார்பேட்டையைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 49). போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர். இவரது சொந்த ஊர் கிருஷ்ணகிரி அருகில் உள்ள எம்.சி.பள்ளி. கடந்த 1993-ல் போலீஸ் பணியில் சேர்ந்த இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தேர்தலுக்காக கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இவருக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. பரிசோதனை மேற்கொண்டதில் இவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமையில் சிகிச்சைப் பெற்று வந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி நேற்று இறந்தார்.

இறந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேசுக்கு, ஜோதிலட்சுமி என்ற மனைவியும், பரத் (20), ஹரிராம் (17) என்ற 2 மகன்களும் உள்ளனர். கடந்த 1-ந் தேதி கிருஷ்ணகிரியில் போலீஸ்காரர் சிலம்பரசன் கொரோனாவுக்கு பலியான நிலையில், தற்போது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் கொரோனாவுக்கு பலியான சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்ட போலீசாரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து