முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி 15-ல் துவக்கம்?

புதன்கிழமை, 12 மே 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

தூத்துக்குடி : ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கான பணிகள் வேகம் எடுத்துள்ள நிலையில் அங்கிருந்து வருகிற 15-ம் தேதி உற்பத்தி தொடங்கும் என தெரிகிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஜூலை மாதம் வரை ஆக்சிஜன் மட்டும் உற்பத்தி செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது.  ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் ஒரு கண்காணிப்பு குழுவை தமிழக அரசு அமைத்தது. கண்காணிப்பு குழுவினர் கடந்த 5-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தினர். தொடர்ந்து ஆலைக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது.

2018-ம் ஆண்டு முதல் 3 ஆண்டுகளாக தொடர்ந்து ஆலையை மூடப்பட்டு உள்ளதால் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை முழுமையாக சீரமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக வேகமாக நடைபெற்று வருகிறது.  ஸ்டெர்லைட் நிறுவன ஊழியர்கள் கடந்த 4 நாட்களாக ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை மீண்டும் இயக்கி பரிசோதனை செய்து வருகின்றனர்.

இதன் முடிவுகள் வெற்றிக்கரமாக இருப்பதாகவும், பரிசோதனை பணிகள் இறுதி கட்டத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது ஆக்சிஜன் உற்பத்தி பகுதியில் 315 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் வேறு உற்பத்தி பகுதிகளுக்கு செல்லாமல் தடுக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.  ஆலை வளாகம் முழுவதும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் கண்காணிப்பு குழு உறுப்பினர்களான மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், சப்-கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர் சத்யராஜ், அனல்மின் நிலைய முதன்மை துணை வேதியியலாளர் ஜோசப் பெல்லார்மின் அன்டன் சோரிஸ், சுற்றுச்சூழல் நிபுணர்கள் அமர்நாத், கனகவேல் ஆகியோர் அடங்கிய கண்காணிப்பு குழுவினர் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை ஆய்வு செய்தனர்.

அப்போது ஆக்சிஜன் தயாரிப்பு நிலைய பகுதியையும் அங்கிருந்து மற்ற பகுதிகளுக்கு பணியாளர்கள் யாரும் செல்லாத வகையில் அமைக்கப்பட்டு உள்ள தடுப்புகளையும் பார்வையிட்டனர். உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் வந்து செல்லும் பாதை குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.  ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கான பணிகள் வேகம் எடுத்துள்ள நிலையில் அங்கிருந்து வருகிற 15-ம் தேதி உற்பத்தி தொடங்கும் என தெரிகிறது. 

தமிழக அரசு சார்பிலும் ஸ்டெர்லைட் நிறுவனத்தில் இருந்து வருகிற 15-ம்  தேதி முதல் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும் என சென்னை ஐகோர்ட்டில் கூறப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து