முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ருதுராஜ் கெய்க்வாட் சதம்

வியாழக்கிழமை, 4 செப்டம்பர் 2025      விளையாட்டு
Rudraaj-Gaikwat 2024-04-20

Source: provided

துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதி போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் மேற்கு - மத்திய மண்டல அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற மேற்கு மண்டல அணி, முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது.

முன்னனி வீரர்களான ஜெய்ஸ்வால் 4 ரன்னிலும், ஸ்ரேயஸ் ஐயர் 25 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். எனினும், அனுபவ வீரரான ருதுராஜ் கெய்க்வாட் நிதானமாக செயல்பட்டு ரன்குவிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கெய்க்வாட், சதமடித்து அசத்தினார். தற்போது 157 பந்துகளில் 13 பவுண்டரியுடன் 121 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். மேற்கு மண்டல அணி தற்போதுவரை 68 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.  

மிஸ்ரா ஓய்வு அறிவிப்பு

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஸ்ரா (வயது 42) அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்துள்ளார். இவர் இந்தியாவுக்காக 22 டெஸ்ட், 36 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தம் 156 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 4 அரைசதங்களும் அடித்துள்ளார். கடந்த 2003 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆன அவர் திறமையான சுழற்பந்து வீச்சாளராக அறியப்பட்டார்.

42 வயதான இவர் சர்வதேச கிரிக்கெட்டில் கடைசியாக  2017-ம் ஆண்டு பெங்களூருவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் விளையாடினார். அதன்பின் அஸ்வின், ஜடேஜா சாஹல், குல்தீப் யாதவ் போன்ற ஸ்பின்னர்களின் வருகையால் அணியிலிருந்து ஓரம் கட்டப்பட்டார். இருப்பினும் ஐ.பி.எல். போட்டிகளில் தொடர்ந்து ஆடி வந்தார். இந்த சூழலில் தற்போது அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அமித் மிஸ்ரா தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று அறிவித்துள்ளார்.

சினெர் அரையிறுதிக்கு தகுதி

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சினெர், சக நாட்டவரான லோரென்சோ முசெட்டி உடன் மோதினார்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சினெர் 6-1, 6-4 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். இவர் அரையிறுதில் பெலிக்ஸ் ஆகர் அலியாசீம் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார். 

அமெரிக்காவில் எம்.எஸ்.தோனி

'கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான செர்பியாவின் ஜோகோவிச், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் உடன் மோதினார். இதில் ஜோகோவிச் 6-3,7-5, 3-6 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளார். அரையிறுதில் அல்காரஸ் - ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

இந்த நிலையில், ஜோகோவிச் விளையாடிய இந்த காலிறுதி போட்டியை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி நேரில் கண்டு ரசித்தார் . இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அரையிறுதிக்கு பாம்ப்ரி தகுதி

யுஎஸ் ஓபனில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். தனது டென்னிஸ் வாழ்க்கையில் பாம்ப்ரி முதன்முதலாக கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். அமெரிக்காவில் நடைபெற்றுவரும் யுஎஸ் ஓபன் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் பாம்ப்ரி - வீனஸ் காலிறுதியில் வென்று அசத்தியுள்ளார்கள். இந்தியாவின் யூகி பாம்ப்ரியும் நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸும் காலிறுதியில் அமெரிக்காவின் ராஜீவ் ராம், குரேஷியாவின் நிகோலா மெக்டிக்கும் மோதினார்கள்.

இந்தப் போட்டியில் பாம்ப்ரி - வீனஸ் இணையினர் 6-3, 6-7(8), 6-3 என்ற செட்களில் வென்று அசத்தினார்கள். ஜுனியர் ஆஸி. ஓபனில் 2009இல் சாம்பியன் பட்டம் வென்ற பாம்ப்ரி சீனியர் போட்டிகளில் தற்போதுதான் தனது உச்சத்தை அடைந்துள்ளார். அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் ஆறாவது இடத்தில் ஜோ சாலிஸ்பரி - நீல் ஸ்குப்ஸ்கி இணையுடன் மோதவிருக்கிறார்கள். ஏற்கெனவே, இந்தியாவில் இருந்து இரட்டையர் பிரிவில் பல கிராண்ட்ஸ்லாம் பதக்கங்கள் கிடைத்துள்ளன. தற்போது, அதில் மற்றுமொரு மகுடத்தை பாம்ப்ரி சேர்ப்பாரா என்ற ஆர்வம் இந்திய ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. 

யூ.ஏ.இ. அணி அறிவிப்பு

ஆசிய கோப்பை தொடருக்கான ஐக்கிய அரபு அமீரக அணி வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் வருகிற செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் உள்ளிட்ட அணிகள் ஏ பிரிவிலும், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங் ஆகிய அணிகள் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே, இந்தியா, பாகிஸ்தான் உள்பட 7 அணிகள் தங்களது வீரர்கள் விவரத்தை அறிவித்துள்ள நிலையில், கடைசி அணியாக போட்டியை நடத்தும் ஐக்கிய அரபு அமீரகம் தங்கள் அணியின் 17 பேர் கொண்ட வீரர்கள் விவரத்தை அறிவித்துள்ளது.  

இதற்கு முன்னதாக, 2016 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பையில் ஐக்கிய அரபு அமீரகம் அணி பங்கேற்றிருந்தது. அதன்பின்னர், இப்போது மீண்டும் போட்டியை நடத்தும் அணியாக பங்கேற்றுள்ளது. அணி விவரம்: முகமது வசீம் (கேப்டன்), அலிஷன் ஷரஃபு, ஆர்யன்ஷ் சர்மா, ஆசிப் கான், துருவ் பராஷர், ஈதன் டிசோசா, ஹைதர் அலி, ஹர்ஷித் கவுஷிக், ஜுனைத் சித்திக், மதியுல்லா கான், முகமது ஃபரூக், முகமது ஜவ்வதுல்லா, முகமது ஜோஹைப், ராகுல் சோப்ரா, ரோஹித் சிங், சிம்ரன்ஜீத் சிங், சகீர் கான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து