முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த சட்டசபை தேர்தலுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி காணாமல் போகும்: பா.ஜ.க.

சனிக்கிழமை, 6 செப்டம்பர் 2025      இந்தியா
Dilip-Ghosh 2025-09-06

Source: provided

காரக்பூர் : அடுத்த சட்டசபை தேர்தலுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி காணாமல் போகும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் திலீப் கோஷ் பேசியுள்ளார்.

மேற்கு வங்காளத்தில் அடுத்த சட்டசபை தேர்தலுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி காணாமல் போகும் என பா.ஜ.க.வின் மூத்த தலைவர் திலீப் கோஷ் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறினார். அப்போது அவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் வீழ்ச்சியடைந்ததுடன் தற்போது மாநிலத்தில் உள்ள சூழலை ஒப்பிட்டு பேசினார்.

அவர் பேசும்போது, அடுத்த தேர்தலுடன் அந்த கட்சி முடிந்து விடும். அவர்கள் ஊழலில் ஈடுபடுகின்றனர். அரசு அலுவலகங்களில் பெரும் குழப்பம் காணப்படுகிறது. சட்டம் ஒழுங்கு இல்லை. இதனால், மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் பாடம் கற்பித்தது போன்று, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இதே நிலை வரும் என கூறினார். ஊழல் மற்றும் தவறான நிர்வாகம் ஆகியவற்றால், அரசு அமைப்பு சீர்கேட்டுக்கு தள்ளப்பட்டு உள்ளது என்றும் குற்றச்சாட்டாக கூறினார்.

கடந்த வியாழக்கிழமை மேற்கு வங்காள சட்டசபையில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பேசும்போது, மாநிலத்தில் ஒரு பா.ஜ.க. எம்.எல்.ஏ. கூட இல்லை என்ற நிலைமை வரும். அவர்கள் தவிர்க்க முடியாத தோல்வியை சந்திப்பார்கள் என்றார். வங்காளிகளுக்கு எதிராக பயங்கரவாத செயலை தொடுத்த எந்த கட்சியும் மேற்கு வங்காளத்தில் வெற்றி பெற முடியாது என்று கூறினார்.

தொடர்ந்து அவர், பா.ஜ.க. வாக்கு திருட்டில் ஈடுபடுகிறது. மத்தியில் ஊழல் நிறைந்து காணப்படுகிறது. மோசடிகளின் தலைவராக உள்ளது. அக்கட்சியை நான் கடுமையாக கண்டிக்கிறேன் என்றும் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து