முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா நோயாளிகளை மீட்டெடுக்க உதவும்: தண்ணீரில் கரைத்து குடிக்கும் பவுடர் வடிவிலான மருந்து : மத்திய அமைச்சர்கள் அறிமுகம் செய்தனர்

திங்கட்கிழமை, 17 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கொரோனா நோயாளிகளை மீட்டெடுக்க உதவும் ஒரு மருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பவுடர் வடிவிலான  இந்த மருந்தை தண்ணீரில் கரைத்து குடிக்க  வேண்டும். அவ்வாறு செய்தால் தொற்றில் இருந்து மீண்டு விடலாம். ஆக்சிஜனை சார்ந்திருக்க வேண்டிய அவசியமும் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாமருந்தை டெல்லியில் மத்திய அமைச்சர்கள் அறிமுகம் செய்தனர்.

இந்தியாவில் கொரோனா வைரசின் கோரத்தாண்டவம் இன்னமும் குறையவில்லை. தடுப்பூசி மட்டும்தான் கொரோனாவை கட்டுப்படுத்தும் ஒரே தீர்வாக சொல்லப்படுகிறது. தற்போது இந்தியாவில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்படுகிறது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியும் தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. 

டி.ஆர்.டி.ஓ  தயாரிப்பு

இந்நிலையில், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) கொரோனாவுக்கு எதிரான 2-டிஜி என்ற மருந்தை தயாரித்துள்ளது. வாய்வழியாக உட்கொள்ளும் வகையில் பவுடர் வடிவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த மருந்தை தண்ணீரில் கரைத்து குடிக்கவேண்டும்.

டி.ஆர்.டி.ஓ ஆய்வகம் மற்றும் ஐதராபாத்தை மையமாகக் கொண்ட டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகங்கள் இணைந்து இந்த மருந்தை உருவாக்கி உள்ளன. இந்த மருந்தானது, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளை விரைவாக மீட்டெடுக்க உதவுவதுடன், ஆக்சிஜனை சார்ந்திருக்க வேண்டிய ஆபத்தான நிலையை குறைக்கிறது என பரிசோதனைகளில் நிரூபணமாகி உள்ளது. எனவே, அவசரகால தேவைக்கு இந்த மருந்தை பயன்படுத்தலாம் என மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்தது. 

இதையடுத்து 2-டிஜி மருந்து டெல்லியில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. மருந்தை பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் ஆகியோர் அறிமுகம் செய்தனர். 

முதல்கட்டமாக 10000 மருந்து பாக்கெட்டுகளை பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வழங்கினார். இந்த மருந்துகள் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் விரைவில் சப்ளை செய்யப்படுகிறது. விரைவில் நாடு முழுவதும் இந்த மருந்து விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்து ஒரு வரப்பிரசாதமாக அமைந்தால் மக்கள் கொரோனா சங்கிலியில் இருந்து விடுபடுவது உறுதி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து