Idhayam Matrimony

ஆஸ்திரேலியா பந்துவீச்சை பார்த்து கற்றுக்கொண்டேன்: லுங்கி இங்கிடி

சனிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
Australia 2024-03-19

Source: provided

டெல்லி : ஆஸ்திரேலியா பந்துவீச்சை பார்த்து கற்றுக்கொண்டேன் என்று லுங்கி இங்கிடி கூறினார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற லுங்கி இங்கிடி, “ஆஸி. பந்துவீச்சாளர்களைப் பார்த்து கற்றுக்கொண்டேன்” எனக் கூறியுள்ளார்.

2-0 என தெ.ஆ. தொடரை வென்றது. இரண்டாவது போட்டியில் 42 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்த லுங்கி இங்கிடி ஆட்ட நாயகன் விருது பெற்றார். 84 ரன்கள் வித்தியாசத்தில் தெ.ஆ. வென்றது. செய்தியாளர்கள் சந்திப்பில் இது குறித்து இங்கிடி பேசியதாவது:-

இரண்டாவதாக பந்துவீசுவதில் ஒர் அழகான விஷயம் இருக்கிறது. எந்த மாதிரி பந்துவீசினால் உபயோகமாக இருக்கும் என நாம் உட்கார்ந்து பார்த்து தெரிந்து கொள்ளலாம். நாதன் எல்லீஸின் திட்டங்களைப் பார்த்தேன். அவர் அதில் மிகவும் வெற்றிகர மாகவே இருந்தார். அதனால், அது எனக்கு சில திட்டங்களை அளித்தது.

சேவியர் பார்ட்லெட் புதிய பந்தில் ஸ்விங்கும் வேகமாக நகர்வதையும் பார்க்க முடிந்தது. இதிலிருந்து எது உபயோகமாகும் என்ற ’ப்ளூபிரிண்ட்’ நமக்கு கிடைக்கிறது. அதை அப்படியே களத்தில் செயல்படுத்த வேண்டியதுதான் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து