முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து மக்களுக்குமான சமூக நீதி அரசாக தி.மு.க. மாடல் அரசு உள்ளது: சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சனிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2025      தமிழகம்
CM-1-2025-08-23

சென்னை, மாநில உரிமைகள் பறிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். தமிழ்நாடு பல துறைகளில் முதலிடத்தில் இருந்தாலும் மத்தியஅரசு குறுகிய மனதோடு தான் இருக்கிறது என  தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் , அனைத்து மக்களுக்குமான சமூகம நீதி அரசாங்கமாக தி.மு.க. மாடல் அரசு உள்ளது என்றும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் மத்திய, மாநில உறவுகள் குறித்த கருத்தரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

பின்னர் அவர் பேசியதாவது: தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான பயன்கள் அனைவருக்கும் சென்று சேர்ந்துள்ளது. திராவிட மாடல் ஆட்சியின் 4.5 ஆண்டுகளில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். மத்தியஅரசு குறுகிய எண்ணத்தோடு செயல்படுகிறது மத்தியஅரசுக்கு அதிக வரி வருவாயை ஈட்டித் தரும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது .

தமிழ்நாடு பல துறைகளில் முதலிடத்தில் இருந்தாலும் மத்தியஅரசு குறுகிய மனதோடு தான் இருக்கிறது. . மாநில உரிமைகள் பறிக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். மத்தியஅரசு அதிகார குவிப்பாக இருக்கிறது, பகிர்வாக இல்லை. நிதி பற்றாக்குறை காலத்தில் கூட வளர்ச்சி குறியீடு இரட்டை இலக்கத்தை எட்டி உள்ளது.

அனைத்து மக்களுக்குமான சமூக நீதி அரசாங்கமாக தி.மு.க. உள்ளது. வரிகளில் அதிக வருமானம் ஈட்டி கொடுக்கும் மாநிலமாக தமிழக அரசு இருக்கிறது. மத்திய அரசு தரும் நிதி மாநில வரி வருமானத்துக்கு ஏற்றவாறு இல்லாமல் குறைவாக உள்ளது. பல்வேறு நெருக்கடிகளிலும் போராடி தமிழ்நாட்டை உயர்த்தி வருகிறோம். தமிழ்நாட்டில் எழுந்த மாநில சுயாட்சி என்ற முழக்கம் தற்போது நாடு முழுவதும் பரவியுள்ளது. தமிழகத்தில் எழுந்த முழக்கம் நாடு முழுவதும் பரவியது .

சட்டக் குறுக்கீடுகள், நிர்வாக குறுக்கீடுகள் வழியாக பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளுக்கு தொடர்ந்து தொல்லை தரும் வகையில், பல தடைகளை மத்தியஅரசு ஏற்படுத்தி வருகிறது. நிதி ஆணையங்கள் சுதந்திரமாக செயல்படுவதையும், மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய உரிய நியாயமான நிதி பங்கீட்டையும் மறுக்கிறது.

இந்தியை திணிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. தமிழ்நாடு பல்வேறு போராட்டங்களை நடத்தி அதை முறியடித்து இருக்கிறது. தமிழ் உணர்வாளர்கள், மாணவர்கள் போராடி கட்டாய இந்தி திணிப்பை தடுத்திருக்கிறார்கள். அதனால் தான் 1968 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா இரு மொழி கொள்கையை சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றினார்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து