முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காசாவில் பஞ்சம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஐ.நா.

சனிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2025      உலகம்
UN 2023-12-09

Source: provided

பாலஸ்தீனம் : காசாவில் கொடும் பஞ்சம் உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து ஐ.நா.

காசாவில் மனிதனால் உருவாக்கப்பட்ட கொடும் பஞ்சம் நிலவுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலை வகைப்பாடு  அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அதன் அறிக்கையின்படி, காசாவில் அரை மில்லியனுக்கும் (5 லட்சத்துக்கும்) அதிகமான மக்கள் கடுமையான பசியை எதிர்கொள்கின்றனர். காசா நகரம் உட்பட பாலஸ்தீனத்தின் சுமார் 20 சதவீத பகுதியில் பஞ்ச நிலைமை இருப்பதாக அறிக்கை கூறுகிறது.

உடனடி போர்நிறுத்தம் செயல்படுத்தப்பட்டு, மனிதாபிமான உதவி கிடைக்காவிட்டால், கான் யூனிஸ் மற்றும் டெய்ர் அல்-பாலா போன்ற தெற்குப் பகுதிகளுக்கு பஞ்சம் பரவக்கூடும். பல்லாயிரக்கணக்கானோர் பட்டினியின் விளிம்பில் உள்ளனர். காசாவில் பசி பட்டினி முற்றிலும் மனிதனால் உருவாக்கப்பட்டது. பசி பட்டினி அங்கு வேகமாக பரவி வருகிறது.

உதவி கிடைப்பதில் ஒரு நாள் தாமதம் கூட பட்டினி மரணங்களை அதிகரிக்கச் செய்கிறது. தடுக்கக்கூடிய இறப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன என்று அறிக்கை எச்சரிக்கிறது. மத்திய கிழக்கு வரலாற்றில் ஒரு பகுதியில் பஞ்சம் அறிவிக்கப்பட்டது இதுவே முதல் முறை ஆகும்.

ஜெனீவாவில் நடந்த கூட்டத்தில் பேசிய ஐ.நா. உதவி பொதுச்செயலாளர் டாம் பிளெட்சர், இது முற்றிலும் தடுக்கக்கூடிய பஞ்சம்.எல்லைகளில் உணவு விநியோகத்தை நிறுத்தும் தடைகளை இஸ்ரேல் திட்டமிட்டு உருவாக்குகிறது. இது நம் அனைவரையும் வேட்டையாடும் பஞ்சம்" என்று கூறினார்.

காசாவின் பஞ்சம் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு என்றும் இது மனிதகுலத்தின் தோல்வி" என்றும் ஐநா பொதுச்செயலாளர் ஆண்டோனியோ குட்ரஸ் தெரிவித்தார். பசியை போர் ஆயுதமாகப் பயன்படுத்துவது ஒரு போர்க்குற்றம் என்று ஐ.நா மனித உரிமைகள் அதிகாரி வோல்கர் டர்க் கூறினார்.

மறுபுறம், இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் ஐ.நா அறிக்கையை கடுமையாகக் கண்டித்தது. "காசாவில் பஞ்சம் இல்லை. இந்த அறிக்கை ஹமாஸால் கூறப்பட்ட பொய்களை அடிப்படையாகக் கொண்டது" என்று அது குற்றம் சாட்டியது. 

ஒரு பகுதியில் பஞ்சத்தை அறிவிக்க, ஐ.பி.சி சில கடுமையான அளவுகோல்களைப் பின்பற்றுகிறது. இந்த அளவுகோல்களில் முக்கியமானது, மக்கள்தொகையில் குறைந்தது 20 சதவீத வீடுகளாவது கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்வது, 30 சதவீத குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவது, ஒவ்வொரு 10,000 பேரில் இரண்டு பெரியவர்கள் அல்லது நான்கு குழந்தைகள் பசியால் உயிரிழப்பது ஆகும். காசாவில் இந்த நிலைமைகள் இருப்பதாக தீர்மானித்துள்ளது. காசாவில் கடந்த ஓரிரு மாதங்களில் பட்டினியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300 நெருங்கி வருவது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து