முடிவுக்கு வந்தது மீன்பிடி தடைகாலம்: கடலுக்கு செல்ல மீனவர்கள் ஆயத்தம்

Fishermen 2021 06 14

Source: provided

சென்னை : தமிழகத்தில் 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் நேற்றுடன்  முடிவுக்கு வந்ததால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல தயாராகி வருகின்றனர். ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்காக விசை படகுகளில் டீசல் நிரப்புதல், பனிக்கட்டிகளை ஏற்றுதல், வலைகளை உலர்த்தி சரிபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போது தடை நீங்கியுள்ள நிலையில், இன்னும் ஒரு வாரத்தில் மீன்கள் விலை படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இருப்பினும் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் மீன்பிடி தடைகாலம் தற்போது தொடங்கியுள்ள நிலையில், மீன் வரத்தின் அளவை பொறுத்தே விலை நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. 

இதனிடையே நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே விசைப்படகுகளை சீரமைக்க தேவையான பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக கடைகள் திறக்கப்படாததால் மீன்பிடிக்க செல்ல இன்னும் 15 நாட்களுக்கு மேல் ஆகும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர். 

மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை தமிழக கடலோரங்களில் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து