தமிழகத்தில் 39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்

TN-Government 2021 05 09

Source: provided

சென்னை :  தமிழகத்தில் 39 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட கலெக்டர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டவர்களுக்கு புதிய பணியிடங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி,

 திண்டுக்கல் கலெக்டராக இருந்த விஜயலெட்சுமி, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை இணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  செங்கல்பட்டு கலெக்டராக இருந்த ஜான் லூயிஸ் உள்துறை இணை செயலராகவும், நாமக்கல் கலெக்டராக இருந்த மேக்ராஜ், நகராட்சி நிர்வாக இணை இயக்குனராகவும், திருப்பூர் கலெக்டராக இருந்த விஜயகார்த்திகேயன், மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளராகவும்,  திருவாரூர் கலெக்டராக இருந்த சாந்தா, நில நிர்வாக கூடுதல் ஆணையராகவும், கரூர் கலெக்டராக இருந்த பிரசாந்த் மு.வடநேரே, நிதித்துறை கூடுதல் செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் மீன்வளத்துறை ஆணையராக கருணாகரன்,  நில சீர்த்திருத்தத்துறை இயக்குனராக ஜெயந்தி,  வணிக வரித்துறை இணை ஆணையராக கற்பகம், போக்குவரத்து துறை ஆணையராக சந்தோஷ் கே.மிஸ்ரா, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக சுந்தரவள்ளி, பத்திரப் பதிவுத்துறை ஐ.ஜி.யாக இருந்த ஷங்கர், தமிழ்நாடு காதி, கிராம தொழில் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும், விவசாயிகள் நலத்துறை சிறப்புச் செயலாளராக ஆபிரகாம்  என மொத்தம் 39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு புதிய பணியிடங்களை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து