தடுப்பூசி செலுத்திக் கொண்ட நியூசிலாந்து பிரதமர்

Jacintha-Artern 2021 06 18

Source: provided

நியூசி : நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் நேற்று முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் நேற்று முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக உலக நாடுகள் பலவும் தங்களது நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியைத் தீவிரப்படுத்தி வருகின்றன.  உலக நாட்டுத் தலைவர்களும் பலரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் நியூசிலாந்து நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் நேற்று கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். அதனைத் தொடர்ந்து மக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். நியூசிலாந்து நாட்டில் ஃபைசர் தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளது. அந்நாட்டில் மொத்தம் இதுவரை 10 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து