முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவர்னர் உரையின் முக்கிய அம்சங்கள்

திங்கட்கிழமை, 21 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : 16 -வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது.

கவர்னர் தனது உரையை, ``வணக்கம்” என தமிழில் தொடங்கினார். மேலும், ``தமிழ் இனிமையான மொழி. எளிமையான வாழ்க்கையை வாழுங்கள்’’ என்றார். 

தொடர்ந்து உரையாற்றிய கவர்னர் மேலும் கூறியதாவது;- 

மாநிலங்களுக்கு சுயாட்சி என்ற இலக்கை எட்ட அரசு உறுதியாக உள்ளது. 

முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகள் தமிழகம் முழுவதும் மீண்டும் அமைக்கப்படும்.

விவசாயிகள் நலனை பாதுகாக்க, வேளாண் உற்பத்தியை பெருக்க, ஆண்டுதோறும் வேளாண் துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட முன்வடிவு கொண்டு வரப்படும்.

நிதிநிலை குறித்து ஜூலை மாதத்தில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். 

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்களும், திருத்தங்களும் மேற்கொள்ள மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும். 

அரசு அலுவலர்கள், ஓய்வூதியர்களுக்கான புதிய காப்பீட்டு திட்டத்தின் பலன்கள் மேலும் உயர்த்தப்படும். 

தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும் அரசு பள்ளிகளில் பயின்றவர்களுக்கும் அரசு பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படும். 

பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

தமிழ் மொழியை இந்திய அலுவல் மொழிகளில் ஒன்றாக அறிவிக்க வலியுறுத்தப்படும். 

சென்னை-கன்னியாகுமரி தொழில் பெருவழியில் புதிய தொழில் நிறுவனங்கள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். 

சென்னை மாநகர கட்டமைப்பை உயர்த்த 'சிங்கார சென்னை 2.0' திட்டம் கொண்டுவரப்படும் 

ரேஷன் அட்டைக்காக விண்ணப்பிக்கும் அனைவருக்கும் 15 நாட்களுக்குள் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும்.

திரவ மருத்துவ ஆக்ஸிஜன் வழங்க ரூபாய் 50 கோடி, மூன்றாம் அலை முன்னேற்ற நடவடிக்கைக்கு ரூபாய் 50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

வேலை வாய்ப்புகளில் பெண்களின் பங்களிப்பை அதிக அளவில் ஊக்குவிக்கும் வகையில், பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் மாவட்டம் தோறும் நிறுவப்படும். 

ரகுராம் ராஜன், டாக்டர் அரவிந்த் சுப்பிரமணியன், பொருளாதார நிபுணர் ஜான் ட்ரீஸ் , டாக்டர் எஸ் நாராயணன் ஆகியோரைக் கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்படும். 

திருநங்கைகள் வேலைவாய்ப்பு பெறுவதற்கும், தொழில் தொடங்குவதற்கும் திறன் பயிற்சி அளிக்கப்படும். 

குழந்தைகள் தொடர்ந்து கல்வி கற்பதை உறுதி செய்ய இலக்கு சார் திட்டம் செயல்படுத்தப்படும். 

தமிழ்நாடு சுற்றுலாவை மேம்படுத்த நடப்பாண்டில் பெருந்திட்டம் ஒன்று வெளியிடப்படும். 

அரசுப் பணிகளில் ஆதி திராவிடர் மற்றும் பழக்குடியினருக்கான நிரப்பப் படாத காலியிடங்கள் சிறப்பு நியமனங்கள் மூலம் நிரப்பபடும். 

மதுரவாயல் சென்னை துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் விரிவுபடுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். 

வங்கிகள் உட்பட அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் தமிழை இணை அலுவல் மொழியாக பயன்படுத்த வேண்டும்; இதற்காக அரசியலமைப்பு சட்டப்பிரிவு 343ல் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள வலியுறுத்துவோம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து