முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகிழக்கு மாநிலங்களில் கொரோனா அதிகம் பரவி வருவது கவலை அளிக்கிறது: பிரதமர் மோடி வேதனை

செவ்வாய்க்கிழமை, 13 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி: கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் வைப்பது தொடர்பாக வடகிழக்கு மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, வட கிழக்கு மாநிலங்களில் கொரோனா அதிகம் பரவி வருவது வேதனையளிக்கிறது என்று தெரிவித்தார்.

நாட்டில் கொரோனா பெருந்தொற்றின் 2-வது அலை பரவல் சற்று தணியத் தொடங்கியுள்ளது. இந்த சூழலில், வடகிழக்கு மாநிலங்களான அசாம், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம், மணிப்பூர், மேகாலாயா, அருணாச்சல பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் கொரோனா பரவல் சற்று அதிகரித்துள்ளது. இந்த மாநிலங்களுக்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய குழுக்கள் அனுப்பப்பட்டன.  கொரோனா தொற்று பரவலின் பாசிட்டிவ் விகிதம் நாட்டில் 73 மாவட்டங்களில் 10 சதவீதமாக இருந்தது என்று கடந்த வாரம் நடைபெற்ற ஆய்வில் தெரியவந்தது. இதில் 46 மாவட்டங்கள் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவை. 

இந்த நிலையில் வடகிழக்கு மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். காணொலி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆலோசனை கூட்டத்துக்குப் பின் பிரதமர் மோடி பேசியதாவது, 

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு ரூ.23 ஆயிரம் கோடியை ஒதுக்கி உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் கொரோனா அதிகம் பரவி வருவது கவலை அளிக்கிறது. மலைவாசஸ்தலங்கள் மற்றும் மார்க்கெட் பகுதிகளில்  மக்கள் முககவசம்  இல்லாமல் பயணம் செய்கிறார்கள் என்பது கவலைக்குரிய விஷயம். நிலைமையைக் கட்டுப்படுத்த நாம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.கொரோனா வழிகாட்டுதல்களை  பின்பற்ற மக்களை ஊக்குவிக்க வேண்டும். மூன்றாவது அலையை எதிர்த்து போராடுவதற்கு, தடுப்பூசி போடும் பணிகளை வேகப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து