முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டி: கேப்டன் ஷிகர் தவான், இஷான் கிஷன் சாதனை

திங்கட்கிழமை, 19 ஜூலை 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

கொழும்பு: இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான் கங்குலியின் சாதனையை சமன் செய்தார். இஷான் கி‌ஷன் தனது அறிமுக போட்டியிலேயே அதிவேகத்தில் அரை சதம் அடித்த 2-வது வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இந்தியா வெற்றி...

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டங்களில் விளையாடுவதற்காக இலங்கை சென்று உள்ளது. கொழும்பில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 80 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

6 ஆயிரம் ரன்கள்...

இந்த போட்டியில் கேப்டன் தவான் 95 பந்துகளில் 86 ரன்னும் (6 பவுண்டரி, 1 சிக்சர்), இஷான் கி‌ஷன் 42 பந்தில் 59 ரன்னும் (8 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். இந்த ஆட்டத்தில் 23 ரன்கள் எடுத்த போது தவான் ஒருநாள் போட்டியில் 6 ஆயிரம் ரன்னை தொட்டார். இந்த ரன்னை அதிவேகத்தில் கடந்த 2-வது இந்தியர் என்ற சாதனையை பெற்றார். அவர் 140 இன்னிங்சில் 17 சதம், 33 அரை சதம் உள்பட 6063 ரன் எடுத்துள்ளார்.

கோலி முதலிடத்தில்...

கங்குலியின் சாதனையை தவான் முறியடித்தார். கங்குலி 147 இன்னிங்சில் 6 ஆயிரம் ரன்னை கடந்து இருந்தார். விராட் கோலி 136 இன்னிங்சில் 6 ஆயிரம் ரன்னை எடுத்து முதல் இடத்தில் உள்ளார். சர்வதேச அளவில் 6 ஆயிரம் ரன்னை அதிவேகத்தில் எடுத்த வீரர்களில் தவான் 4-வது இடத்தில் உள்ளார்.

10-வது இந்திய வீரர்...

ஒருநாள் போட்டியில் 6 ஆயிரம் ரன்களை எடுத்த 10-வது இந்திய வீரர் தவான் ஆவார். டெண்டுல்கர் (18,426 ரன்), விராட்கோலி (12,169), கங்குலி (11,221), ராகுல் டிராவிட் (10,768), டோனி (10,599), அசாருதீன் (9,378), ரோகித்சர்மா (9,205), யுவராஜ்சிங் (8,609), ஷேவாக் (7,995) ஆகியோரது வரிசையில் தவான் இணைந்தார்.

6-வது இந்திய வீரர்.... 

அதேபோல் ஒருநாள் சர்வதேச போட்டி கேப்டன்சி அறிமுகப் போட்டியில் அரைசதம் எடுத்த 6வது வீரர் ஆனார் ஷிகர் தவான். இவருக்கு முன்னால், அஜித் வடேகர், ரவிசாஸ்திரி, சச்சின் டெண்டுல்கர், அஜய் ஜடேஜா, எம்.எஸ். தோனி ஆகியோர் இதே சாதனையைப் புரிந்துள்ளனர்

அதிவேக அரைசதம்...

இஷான் கி‌ஷன் தனது அறிமுக போட்டியிலேயே அசத்தினார். முதல் போட்டியிலேயே அதிவேகத்தில் அரை சதம் அடித்த 2-வது வீரர் என்ற சாதனையை அவர் பெற்றார். அவர் 33 பந்தில் அரை சதத்தை தொட்டார். குணால் பாண்ட்டியா அறிமுக போட்டியில் 26 பந்தில் அரை சதம் எடுத்து சாதனை படைத்து இருந்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து