ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 6 மாத கால அவகாசம்: தமிழக அரசு அறிவிப்பு

tamilnadu-govt-2021-07-23

Source: provided

சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 6 மாத கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா மரணம் தொடா்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி தமிழக அரசு அமைத்தது. அதன்படி ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் 6 மாதம் கால அவகாசம் நீட்டித்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. நாளையுடன் கால அவகாசம் முடிவடையும் நிலையில் மேலும் 6 மாத காலம் அவகாசம் அளித்து தமிழக அரசு இந்த நீட்டிப்பினை செய்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து