சோனியா காந்தியுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு

Sonia-Mamta 2021 07 28

Source: provided

புதுடெல்லி : காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று சந்தித்து பேசினார். 

மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, பா.ஜ.க.விற்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

டெல்லியில் முகாமிட்டுள்ள அவர் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறார். நேற்று முன்தினம் மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்தை சந்தித்துப் பேசிய மம்தா பானர்ஜி காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த் சர்மாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 

இந்த நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து மம்தா ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தியும் உடனிருந்தார். மம்தா பானர்ஜியின் இந்த நடவடிக்கை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து