முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒலிம்பிக் பேட்மிண்டன்: அரையிறுதியில் பி.வி. சிந்து தோல்வி

சனிக்கிழமை, 31 ஜூலை 2021      விளையாட்டு
Image Unavailable

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டனில் பி.வி. சிந்து தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்தை வெல்வார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்த நிலையில் அரையிறுதியில் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தார்.

முன்னிலையில்... 

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் அரையிறுதியில் இந்தியாவின் பி.வி. சிந்து (6) சீன தைஃபேயின் தை சூ-யிங்கை (2) எதிர்கொண்டார். இந்த போட்டியின் முதல் செட்டில் பி.வி. சிந்து ஒரு கட்டத்தில் 11-8 என முன்னிலையில் இருந்தார். அதன்பின் தை சூ-யிங் ஆதிக்கம் செலுத்திய காரணமாக 18-21 என்ற கணக்கில் முதல் செட்டில் தோல்வி அடைந்தார்.

நேர் செட்டில் வெற்றி...

2 செட்டில் தொடக்கத்தில் இருந்தே தை சூ-யிங் ஆதிக்கம் செலுத்தினார். இடைவேளையின் போது 11-6 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். அதன் பின் பி.வி. சிந்துவால் ஆதிக்கம் செலுத்தி புள்ளிகளை பெற முடியவில்லை. இதனால் 2-வது செட்டையும் சீன தைஃபே வீராங்கனை தை சூ-யிங் 21-12 என்ற நேர் செட் கணக்கில் கைப்பற்றி பி.வி. சிந்துவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

வெண்கலப் பதக்க...

இப்போட்டியில் தோல்வி அடைந்த பி.வி. சிந்து, மற்றோரு அரையிறுதியில் தோல்வி அடைந்த சீன வீராங்கனை ஹிபிங்கை வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் எதிர் கொள்கிறார். இந்த போட்டி இன்று நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து