முதல் தகவல் அறிக்கை நகலின்றி பாதிரியார் பொன்னையா வழக்கு தொடர ஐகோர்ட் மதுரை கிளை அனுமதி

madurai-high-court-2021-07-

Source: provided

மதுரை : அரசியல் தலைவர்களை அவதூறாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா வழக்கு தொடர உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் அருமனை என்ற இடத்தில் கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் அரசியல் தலைவர்களை கடுமையாக விமர்சித்து பேசியதாக பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது புகார் எழுந்தது.

இது தொடர்பான ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனையடுத்து, சர்சைக்குரிய பேச்சு காரணமாக பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யபட்டது. இதன் காரணமாக பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா தலைமறைவாகினார்.

தலைமறைவான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை போலீசார் மதுரையில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதனைத்தொடர்ந்து ஜாமினில் விடுவிக்க கோரி நீதிமன்றத்தில் ஜார்ஜ் பொன்னையா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் அரசியல் தலைவர்களை அவதூறாக பேசிய வழக்கை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்தார். தன் மீது பதியப்பட்ட வழக்கின் நகல் இன்றி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய அனுமதிக்க கோரி பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கேட்டிருந்தார். இதைத்தொடர்ந்து, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா நகலின்றி வழக்கு தொடர உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து