முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒலிம்பிக் ஈட்டி எறிதல்: இறுதிக்கு 'நீரஜ் சோப்ரா' நேரடியாக முன்னேற்றம் டோக்கியோ, ஆக. 05- டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் 86.65 மீ தூரம் எறிந்து இறுதிக்கு நேரடியாகத் தகுதி பெற்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா. முதல் இந்திய வீரர்... 23 வயதே நிரம்ப

புதன்கிழமை, 4 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

ஒலிம்பிக் ஈட்டி எறிதல்: இறுதிக்கு 'நீரஜ் சோப்ரா' நேரடியாக முன்னேற்றம்

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் 86.65 மீ தூரம் எறிந்து இறுதிக்கு நேரடியாகத் தகுதி பெற்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா.

முதல் இந்திய வீரர்... 

23 வயதே நிரம்பிய நீரஜ் சோப்ரா ஜாவ்லின் த்ரோ என்ற ஈட்டி எறிதலில் ஒலிம்பிக் இறுதிக்கு தகுதிபெற்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். நேரடியாக இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற 83.50 மீ விட்டெறிந்தால் போதுமானது. ஆனால் அவர் எறிந்த தூரம் 86.65 மீ. இதனால் அவர் நேரடியாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

விவசாயி மகன்... 

இந்த நீரஜ் சோப்ரா ஹரியாணா மாநிலம் பானிபட் அருகே உள்ள காந்த்ரா என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர், இவர் விவசாயி மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

கடின முயற்சி...

கோவிட் 19 காரணமாக ஒலிம்பிக் தயாரிப்பில் கடுமையாக பின்னடைவு ஏற்பட்டது. “நாங்கள் தயாராகவே இருந்தோம், ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக எல்லாம் மூடப்பட்டது, பிறகு பயிற்சி தொடங்கினால் ஒவ்வொரு நாளும் பயிற்சி செய்ய வேண்டியதாயிற்று இது மிகவும் கடினமாக இருந்தது” என்கிறார் நீரஜ் சோப்ரா. ஆசியப் போட்டிகள், காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்று சாதித்தவர்தான் இந்த நீரஜ் சோப்ரா.

அதிக தூரம்... 

ஆனால் ஒலிம்பிக் இறுதி என்பது பற்றி நீரஜ் சோப்ரா கூறும்போது, “இது என்னுடைய முதல் ஒலிம்பிக் போட்டி என்பதனால் வித்தியசமாக உணர்கிறேன். இறுதியில் பெரிய ஜாம்பவான்களெல்லாம் இருக்கின்றனர், நான் இன்னும் முன்னேற்றம் காட்ட வேண்டும், அதிக தூரம் எறிய வேண்டும்.

இறுதிச் சுற்று... 

ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிச் சுற்று ஆகஸ்ட் 7ம் தேதி தொடங்குகிறது. இறுதியில் பெரிய ஜாம்பவான் ஆன ஜெர்மனியின் ஜொகான்னஸ் வெட்டரை விடவும் பிரமாதமாகவே தகுதிச் சுற்றில் எறிந்து  இறுதிக்கு முன்னேறினார், ஆனால் வெட்டரும் (85.64),  இறுதிக்கு முன்னேறியதால் அவரிடமிருந்து டஃப் ஃபைட் எதிர்பார்க்கலாம், இவரெல்லாம் 90 மீ தாண்டி வீசக்கூடியவர்.

பதக்க நம்பிக்கை...

பின்லாந்தின் லஸி எடிலாட்டலோ 84.50 மீ விட்டெறிந்து இறுதிக்கு முன்னேறியுள்ளார், இவர்களையெல்லாம் கடந்து நீரஜ் சோப்ரா அதிக தூரம் விட்டெறிந்ததால் இந்தப் பிரிவில் இந்தியாவுக்கு நிச்சயம் பதக்கம் வரும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. முன்னதாக உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் 86.48 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து ஜூனியர் அளவில் உலக சாதனை படைத்து, தங்க பதக்கமும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

BOX - 1

முடியை வெட்டிய நீரஜ் 

தகுதிச்சுற்றுப் போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் நீரஜ் சோப்ரா கூறியதாவது.,  என்னுடைய நீண்ட முடியை வெட்டிவிட்டேன். ஸ்விட்சர்லாந்தில் அதைச் செய்தேன். பிறகு மீண்டும் பெரிதாக இருப்பதாக உணர்ந்ததால் ஸ்வீடனிலும் முடி வெட்டினேன். 

நீண்ட முடி வைத்துக்கொண்டால் வியர்வை அதிகமாக ஏற்படும். நீண்ட முடி இருந்தால் அதன்மீது கூடுதல் கவனம் செலுத்தி பராமரிக்க வேண்டியுள்ளது. என்னுடைய ஆட்டத்திறமை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நீண்ட முடியை வெட்டிவிட்டேன். ன எண்ணினேன் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து