முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: மொத்த பதக்க எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடம்

வெள்ளிக்கிழமை, 6 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி முடிய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் பதக்க எண்ணிக்கையில் 97 பதக்கங்களை பெற்று மொத்த பதக்கங்கள் வரிசையில் அமெரிக்கா முதலிடம் பெற்றுள்ளது. ஆனால் சீனாவை விட 5 தங்கப்பதக்கங்களை  குறைவாக பெற்று தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ளது அமெரிக்காவுக்கு பின்னடைவாகவே பார்க்கப் படுகிறது.

கடும் போட்டி... 

டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்க பட்டியலில் முதலிடம் பிடிப்பதில் அமெரிக்கா, சீனாவுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பொதுவாக பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் போன்ற விளையாட்டுகள் நடைபெறும்போது சீனா ஆதிக்கம் செலுத்தும்.

சீனா ஆதிக்கம்...

தடகள போட்டிகள் தொடங்கியதும் அமெரிக்கா அதிகமான பதக்கங்களை பெற்று முன்னிலை பெறும். நீச்சல் போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தும். ஆனால் இந்த முறை தடகள போட்டிகள் தொடங்கி இரண்டு மூன்று நாட்கள் ஆகிறது. போட்டி முடிவடைய இன்னும் 2 நாட்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில்,  சீனாவே தங்கப்பதக்கத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

அமெரிக்கா முதலிடம்...

சீனா நேற்று இரவு 9 மணி நிலவரப்படி 36 தங்கம், 26 வெள்ளி, 17 வெண்கலத்துடன் 79 பதக்கங்கள் பெற்று பதக்க பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. அமெரிக்கா 31 தங்கம், 35 வெள்ளி, 31 வெண்கலம் என மொத்தம் 97 பதக்கங்கள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. ஆனால் மொத்த பதக்க எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடம் பெற்றுள்ளது. 

5 தங்கப்பதக்கம்...

ஆனால், தங்கத்தில் சீனாவை விட 5 குறைவாக உள்ளது. தங்கப்பதக்கத்தில் சீனாவை முந்தினால் மட்டுமே, டோக்கியோ ஒலிம்பிக் பதக்க பட்டியலில் அமெரிக்க முதலிடம் பிடிக்க முடியும். ஜப்பான் 24-11-16  என 3-வது இடத்திலும், 18-19-19 என கிரேட் பிரிட்டன் 4-வது இடத்திலும், 17-23-22 என ரஷ்யா ஒலிம்பிக் கமிட்டி 5-வது இடத்திலும் உள்ளது. 2 வெள்ளி, 3 வெண்கலத்துடன் மொத்தம் 5 பதக்கங்களுடன் இந்திய அணி 66-வது இடத்தில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து