முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மழை இல்லாமல் இருந்திருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்போம்: இந்திய கேப்டன் கோலி ஆதங்கம்

திங்கட்கிழமை, 9 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் மழையால் டிராவானதை அடுத்து பேசிய கேப்டன் விராட் கோலி, மழை இல்லாமல் இருந்திருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்போம் என தனது ஆதங்கத்தை வெளிப் படுத்தியுள்ளார். ஆனால் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், நாங்கள் முன்னிலையில் இருந்தோம் என்று தெரிவித்துள்ளது ரசிகர்கள் இடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

4 - 4 புள்ளிகள்...

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டின் கடைசி நாள் ஆட்டம் மழையால் முற்றிலுமாக பாதிக்கப்பட்டதை அடுத்து, ஆட்டம் டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெறும் வாய்ப்பு இருந்த நிலையில், அது பறிபோயுள்ளது. இதனால் இந்த ஆட்டத்துக்கான புள்ளியை இரு அணிகளும் சமமாக (4-4) பகிர்ந்துள்ளன.

209 ரன்கள் இலக்கு...

209 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா 4-ம் நாளான சனிக்கிழமை முடிவில் 14 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்திருந்தது. ரோஹித் சா்மா 12, சேதேஷ்வா் புஜாரா 12 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

முதல் இன்னிங்ஸ்...

முன்னதாக புதன்கிழமை தொடங்கிய முதல் டெஸ்டில் டாஸ் வென்று பேட்டிங்கை தோ்வு செய்த இங்கிலாந்து, முதல் இன்னிங்ஸில் 65.4 ஓவா்களில் 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னா் இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் மட்டும் 84 ரன்கள் சோ்க்க, இந்தியா 84.5 ஓவா்களில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

இங்கி. 303 ரன்கள்... 

இங்கிலாந்து பௌலா்களில் ஆலி ராபின்சன் அபாரமாக 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸில் 95 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து 85.5 ஓவா்களில் 303 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 109 ரன்கள் விளாசினார். இந்திய தரப்பில் பும்ரா 5 விக்கெட் எடுத்தார்.

முன்னிலையில்...

இந்நிலையில் மழையால் டிரா ஆன டெஸ்ட் பற்றி இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கூறியதாவது., என்னுடைய கோணத்தில் இந்த ஆடுகளத்தில் 40 ஓவர்கள் வீச வாய்ப்பு இருந்திருந்தால் எங்களால் (விக்கெட்டுகளை வீழ்த்த) ஒன்பது வாய்ப்புகளை உருவாக்கி இருக்க முடியும். இந்திய அணி முன்னிலையில் இருந்தது என்பதை நான் மறுத்தால் பொய் சொல்பவனாகி விடுவேன். 

துரதிர்ஷ்டவசம்...

ஆனால் இதுபோன்ற ஆடுகளத்தில் இரு விக்கெட்டுகளை முதலில் வீழ்த்தினால் அது பெரிய சரிவை ஏற்படுத்தி விடும். கடைசி நாளில் 5-ம் நாள் ஆடுகளத்தில் எங்களுக்குச் சாதகமான சூழல் ஏற்பட்டிருக்கும். துரதிர்ஷ்டவசமாக மழை ஜெயித்துவிட்டது என்றார். 

நல்ல வாய்ப்பு...

இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது., “கடைசி நாளில் போட்டி நடந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். நடக்காமல் போனது வருத்தம் அளிக்கிறது. இலக்கை அடைய எங்களுக்கு நல்ல வாய்ப்பு இருந்தது. நல்ல தொடக்க வேண்டும் என எண்ணினோம். அதுபோல கிடைத்தது. 

நிச்சயம் வெற்றி...

“ 3வது 4-வது நாளில் மழைவரும் என எதிர்பார்த்தோம், ஆனால், 5-வது நாளில்வந்திருக்கிறது. 5-ம் நாளில் எங்களுக்கான வெற்றி வாய்ப்பு இருந்தது. ஒரு நல்ல கூட்டணி உருவாகியிருந்தால் நாங்கள் 150 ரன்கள் எடுப்பதைத் தடுப்பது கடினமாக இருந்திருக்கும். எனவே இந்த ஆட்டத்தில் நாங்கள் முன்னிலையில் இருந்ததாக எண்ணினோம். மழை இல்லாமல் இருந்திருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்போம் எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து