முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோக்யோ ஒலிம்பிக் மலர்கொத்துக்கு பின் மறைந்திருக்கும் 'உண்மை கதை'

திங்கட்கிழமை, 9 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு மலர்கொத்து ஒன்று பரிசாக வழங்கப்படுவது மரபு. அதேபோல் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் முதல் 3 இடங்களை பிடித்த வீரர் - வீராங்கனைகளுக்கு ஒரு மலர்கொத்து பரிசாக வழங்கப்பட்டது. அந்த மலர்கொத்துக்கு பின்னால் ஒரு கதையே உள்ளது. அதுவும் தீரா வடுவை ஏற்படுத்திய அந்த சோகத்தை பிரதிபலிக்கும் அடையாளமாக அந்த மலர்கொத்து வழங்கப்பட்டுள்ளது.

3 மாவட்டங்களில்...

இதுவரை ஒலிம்பிக் மற்றும் பாரலிம்பிக் போட்டிகளில் சுமார் 5000க்கும் மேற்பட்ட மலர்கொத்துகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மலர்கொத்துகளில் உள்ள பூக்கள் குறிப்பாக ஜப்பானின் வட கிழக்கு பகுதியில் மூன்று மாவட்டங்களில் விளைகின்றன. 

2 ஆயிரம் பேர்...

இந்த மூன்று மாவட்டங்களும் 2011-ம் ஆண்டு பூகம்பம் மற்றும் சுனாமி, பின் ஃபுகுஷிமா அணு ஆலையில் அடுத்தடுத்த விபத்துக்குள்ளான அணு உலைகள் ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டன. இவாடே, ஃபுகுஷிமா மற்றும் மியாகி ஆகிய மாவட்டங்களை தாக்கிய இந்த பேரழிவால் சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

3 நிறப் பூக்கள்...

ஒலிம்பிக் மற்றும் பாரலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் மலர்கொத்தில் உள்ள மஞ்சள், பச்சை மற்றும் நீல நிற பூக்கள் கிட்டத்தட்ட இந்த மூன்று மாவாட்டங்களில் தான் விளைகின்றன. மலர்கொத்தில் பளிச்சென்று காணப்படும் மஞ்சள் நிறப் பூக்கள் மியாகி மாவட்டத்தில் விளைந்தவை.

தப்பிக்க ஓடியதால்...

இந்த பூக்கள் அந்த பேரழிவில் குழந்தைகளை இழந்த பெற்றோர்களால் நடப்பட்டவை. பெற்றோர்கள் இந்த பூக்களுக்கான செடிகளை நடுவதற்கு மலைப்பக்கத்தை தேர்ந்தெடுத்ததற்கு காரணம் உண்டு. அங்குதான் அவர்களின் குழந்தைகள் சுனாமியிலிருந்து தப்பிக்க ஓடினர் என்பதுதான் அந்தக் காரணம். 

மீட்கும் நடவடிக்கை...

அழகிய வெள்ளை மற்றும் ஊதா நிறத்திலான எஸ்டோமாஸ் மற்றும் சாலமன் சீல் எனப்படும் பூக்கள் ஃபுகுஷிமாவில் விளைந்தவை. இந்த பூக்கள் பேரழிவால் சிதைந்து போன பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கையாக லாப நோக்கமற்ற ஒரு தன்னார்வல நடவடிக்கையால் விளைவிக்கப்பட்டவை.

இவாடே மாவட்டம்... 

ஏற்பட்ட பேரழிவால் அந்த மாவட்டத்தின் விவசாய உற்பத்தி பெரும் பாதிப்பை சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அழகிய, சிறிய, நீல நிறத்தினாலான பூக்கள் இவாடே மாவட்டத்தில் ஒரு கடற்கரை பகுதியில் விளைந்தவை. அந்த கடற்கரை நகரம் 2011-ம் ஆண்டு பேரழிவில் முழுவதுமாக அழிந்துபோனது.

ஆஸ்பிடிஸ்டிராஸ்...

இந்த மலர்கொத்தை மேலும் முழுமையாக்க டோக்யோவில் விளைந்த ஆஸ்பிடிஸ்டிராஸ் பூக்கள் சேர்க்கப்ப்ட்டுள்ளன. இந்த பூக்கள் ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நகரை குறிப்பதற்காக சேர்க்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து