தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 உயர்வு

Gold-raye-2021-08-07

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 உயர்ந்துள்ளது.

தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டு வந்தது. இந்த நிலையில் தங்கம் விலையில் நேற்று முன்தினம் மாற்றம் ஏற்பட்டது. சென்னையில் கடந்த புதன்கிழமை கிராம் ரூ.4 ஆயிரத்து 368-க்கும், பவுன் ரூ.34 ஆயிரத்து 944-க்கும் தங்கம் விற்பனை ஆனது. இந்தநிலையில் தங்கம் விலை நேற்று முன்தினம் அதிகரித்தது. முந்தைய நாள் விலையை காட்டிலும் கிராமுக்கு ரூ.27 உயர்ந்து ரூ.4 ஆயிரத்து 395-க்கும், பவுனுக்கு ரூ.216 உயர்ந்து ரூ. 35 ஆயிரத்து 160 -க்கும் தங்கம் நேற்று முன்தினம் விற்பனை ஆனது.

இந்நிலையில், நேற்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2 அதிகரித்து கிராமுக்கு ரூ.4,397-க்கு விற்பனையானது. அதன் படி சவரனுக்கு ரூ.16 அதிகரித்து ரூ.35,176க்கு விற்பனையானது.  மேலும் வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.67.50-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.67,500-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை கடந்த 3 நாட்களாக இதே விலையில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து