முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: ஆஸ்திரேலிய மகளிர் அணி அறிவிப்பு

வியாழக்கிழமை, 19 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

கான்ப்ராக்: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வருகிற செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 ஒருநாள், ஒரே ஒரு டெஸ்ட் (பகல்-இரவு), மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.

முதல் போட்டி...

இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் செப்டம்பர் 19-ம் தேதியும், 2-வது ஒருநாள் போட்டி மெல்போர்னில் 22-ம் தேதியும், 3-வது ஒருநாள் போட்டி மெல்போர்னில் 24-ம் தேதியும் நடக்கிறது. டெஸ்ட் போட்டி பெர்த்தில் செப்டம்பர் 30-ம் தேதி முதல் அக்டோபர் 3-ம் தேதி வரையும், 20 ஓவர் போட்டிகள் சிட்னியில் முறையே அக்டோபர் 7, 9, 11 ஆகிய தேதிகளிலும் நடக்கிறது.

ஜார்ஜியா - ஸ்டெல்லா...

இந்தியாவுக்கு எதிரான தொடருக்கான ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சு வீராங்கனை மெகன் ஸ்சட், பெலின்டா தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவும், ஆல்-ரவுண்டர் ஜெஸ் ஜானசன் காயத்தாலும் அணி தேர்வில் கருத்தில் கொள்ளப்படவில்லை. ஜார்ஜியா ரெட்மைன், 19 வயது வேகப்பந்து வீச்சு வீராங்கனை ஸ்டெல்லா கேம்ப்பெல் ஆகியோர் அறிமுக வீராங்கனைகளாக அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 

ஆஸ்திரேலிய மகளிர் அணி :

மெக் லானிங் (கேப்டன்), ராய்சல் ஹேனஸ், டார்சி பிரவுன், மேட்லன் பிரவுன், ஸ்டெல்லா கேம்ப்பெல், நிகோலா கேரி, ஹேனா டார்லிங்டன், ஆஷ்லி கார்ட்னெர், அலிசா ஹீலி, டாலியா மெக்ராத், சோபி மாலினெக்ஸ், பெத் மூனி, எலிஸ் பெர்ரி, ஜார்ஜியா ரெட்மைன், மோலி ஸ்ரானோ, அனபெல் சதர்லேன்ட், டைலா விளாமிங், ஜார்ஜியா வேர்ஹேம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து