முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலியல் கொடுமையை சொல்லும் மெய்ப்பட செய்

வெள்ளிக்கிழமை, 20 ஆகஸ்ட் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

S R பிலிம் பேக்டரி என்ற பட நிறுவனம் சார்பில் தமிழ் ராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து தயாரித்திருக்கும் படம் " மெய்ப்பட செய் " ஆதவ் பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக மதுனிகா அறிமுகமாகிறார். மற்றும் ராஜ்கபூர், ஆடுகளம் ஜெயபால், ஓ. ஏ.கே.சுந்தர், பெஞ்சமின்,ஞான பிரகாசம் E G P, சூப்பர் குட் சுப்ரமணி, விஜய கணேஷ்,  தவசி, அட்டு முத்து, சிவா , ராஜ மூர்த்தி, எமில் கணபதி, அனிஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இவர்களுடன் தயாரிப்பாளர் தமிழ் ராஜ் நடித்துள்ளார். படம் பற்றி இயக்குனர் வேலன் கூறியதாவது.... கொரொனா என்னும் கொடிய நோயை விட மிகப்பெரிய கொடிய நோய் தான் பாலியல் வன்கொடுமை. இந்த  கருத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் தான் " மெய்ப்பட செய் " நமது தலைமுறை நன்றாக வாழ பணம், நகை, சொத்து எல்லாவற்றையும் சேர்த்து வைக்க நினைக்கும் நாம், நமது தலைமுறை  நிம்மதியாக வாழ எதை சேர்த்துக் கொண்டிருக்கிறோம் என்று தெரியவில்லை.

ஒரு கிராமத்தில் இருந்து தன்னலமற்ற நகர வாழ்க்கை பற்றி அனுபவமே இல்லாத நான்கு நண்பர்கள் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் வாழ சென்னைக்கு வருகிறார்கள். இங்கே நடக்கும் அநியாயங்களை பார்த்து    வியக்கின்றனர். இதை தட்டிக் கேட்க வேண்டும் என்று துடிக்கையில் இங்கே இருக்கும் யாருமே அதை கண்டுகொள்ளாமல் சுயநலமாக  இருப்பது எதனால். அவர்களது சூழ்நிலை என்ன.. ஏன் தட்டி கேட்க மறுக்கிறார்கள் என்ற அவர்களது  கேள்விகளுக்கு விடைதான் இந்த " மெய்ப்பட செய் " படம்

படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்கிறார் இயக்குனர் வேலன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து