முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக அண்டர்-20 தடகள சாம்பியன்ஷிப்: 10 ஆயிரம் மீ 'ரேஸ் வாக்கிங்கில்'அமித் குமார் வெள்ளி வென்றார்

சனிக்கிழமை, 21 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

நைரோபி : கென்ய நாட்டின் தலைநகர் நைரோபியில் நடைபெற்று வரும் உலக இளையோர் அண்டர் - 20 தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் இந்திய தடகள வீரர் அமித் குமார். ரேஸ் வாக்கிங் போட்டியில் அவர் இந்த பதக்கத்தை வென்றுள்ளார். 

வானியோனி...

பந்தய தூரமான 10000 மீட்டரை 43 நிமிடங்கள், 17:94 நொடிகளில் கடந்து 2-ம் இடம் பிடித்துள்ளார் அவர். கென்ய வீரர் ஹரிஸ்டோன் வானியோனி முதலிடம் பிடித்து தங்கம் வென்றுள்ளார். தொடக்கம் முதலே ரேஸில் லீட் செய்து வந்த அமித், இறுதியில் சில லேப்களில் லீடிங் செய்வதை இழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ஆறு பதக்கங்கள்...

இதுவரை மொத்தமாக உலக இளையோர் தடகள சாம்பியன்ஷிப் வரலாற்றில் 2 தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என ஆறு பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து