முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 உலகக் கோப்பை போட்டி: பி.சி.சி.ஐ - கோலி ஆலோசனை

சனிக்கிழமை, 21 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

லண்டன் : டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நெருங்கி வரும் நிலையில், அதுதொடர்பாக இந்திய கேப்டன் விராட் கோலி - பி.சி.சி.ஐ உயர்நிலை அதிகாரிகள் ஆலோசித்துள்ளனர்.

வியூகம் குறித்து... 

லார்ட்ஸ் டெஸ்டின்போது, பி.சி.சி.ஐ சௌரவ் கங்குலி, செயலர் ஜெய் ஷா, துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோர் கேப்டன் கோலியுடன் உலகக் கோப்பை போட்டிக்கான வியூகம் குறித்து ஆலோசித்துள்ளனர். அதில், ஒரு கேப்டனாக கோலியின் பொறுப்பு குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டுள்ளது.

தயார் நிலை குறித்து... 

உலகக் கோப்பை போட்டிக்கு கொஞ்ச காலமே இருக்கும் நிலையில், ஐ.பி.எல் போட்டியை தவிர்த்து வேறு எந்தவொரு போட்டிகளும் இல்லாததால் உலகக் கோப்பைக்கான தயார் நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக பி.சி.சி.ஐ வட்டாரங்கள் கூறின.

பாக்.கிற்கு எதிராக...

சமீபத்திய லார்ட்ஸ் டெஸ்ட் வெற்றி, ஒரு கேப்டனாக கோலிக்கு இருந்த நெருக்கடியை சற்று குறைத்திருந்தாலும், உலகக் கோப்பை போட்டியில் இந்தியா தனது ஆட்டத்தை பாகிஸ்தானுக்கு எதிரான மோதலுடன் தொடங்குவது, எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பதை அவர் உணராமல் இருக்க வாய்ப்பில்லை.

அணியை தேர்வு...

இந்த டி-20 உலகக் கோப்பை போட்டிக்கான அணித் தேர்வு விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், பௌலர்களுக்கு இருக்கும் பணிச்சுமை, ஆல்-ரவுண்டர் இடத்துக்கான வீரர்கள், சுழற்பந்துவீச்சாளர்கள், இவர்களுக்கெல்லாம் மாற்று வீரர்கள் ஆகியவை குறித்து அணி நிர்வாகம் தகுந்த முடிவெடுக்க வேண்டியுள்ளது. ஏனெனில், டி-20-இல் சிறந்து விளங்கும் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகளுக்கு சவால் அளிக்கும் விதமாக அந்த அணி இருக்க வேண்டும்.

விரைவில் தேர்வு... 

அதற்குத் தகுந்த அணியை கேப்டன் கோலி, தேசிய தேர்வாளர்கள் குழு தலைவர் சேத்தன் சர்மா ஆகியோர் இணைந்து விரைவில் தேர்வு செய்ய வேண்டும் என பி.சி.சி.ஐ எதிர்பார்க்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!