Idhayam Matrimony

உலக ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப்: வெண்கலத்திற்கான சுற்றில் ரவி மாலிக்

ஞாயிற்றுக்கிழமை, 22 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மாஸ்கோ: ரஷியாவில் நடைபெறும் உலக ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ரவி மாலிக் 82 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்க சுற்றுக்கு வந்துள்ளார்.

வெண்கலத்திற்கான...

கிரேக்கோ ரோமன் பிரிவில் பங்கேற்ற இதர இந்திய போட்டியாளர்கள் முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறிவிட்ட நிலையில், ரவி மாலிக் அரையிறுதி வரை முன்னேறி அதில் தோல்வி கண்டு தற்போது வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றில் களம் காண இருக்கிறார்.

கச்சாத்ரியா... 

முன்னதாக மாலிக் தனது முதல் சுற்றில் எஸ்டோனியாவின் ராபின் உஸ்பென்ஸ்கியை 6-0 என்ற கணக்கில் வென்றார். அடுத்ததாக காலிறுதியில் 18-9 என்ற கணக்கில் கிர்ஜிஸ்தானின் ஜெனிஷ் ஹம்னாபெகோவை வீழ்த்திய ரவி, அரையிறுதியில் ஆர்மீனியாவின் காரென் கச்சாத்ரியானிடம் வீழ்ந்தார். தொழில்நுட்பப் புள்ளிகள் அடிப்படையில் ரவியை வென்றார் காரென். இதையடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான பிளே-ஆஃப் சுற்றில் ரவி களம் காண்கிறார்.

பாவெல் லின்சுக்...

மற்றொரு இந்தியரான நரீந்தர் சீமா (97 கிலோ) தனது முதல் சுற்றில் ஜெர்மனியின் ஆன்டன் எரிச் வியுவெக்கை 10-6 என்ற கணக்கில் வென்றார். அடுத்த சுற்றில் உஸ்பெகிஸ்தானின் அப்ரோர்பெக் நுர்முகாமிதோவை 11-6 என்ற கணக்கில் வெளியேற்றிய நரீந்தர், காலிறுதியில் பெலாரஸ் வீரர் பாவெல் லின்சுக்கிடம் தோல்வி கண்டார். பின்னர் பாவெல் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியதன் அடிப்படையில் ‘ரெபிசேஜ் சுற்று’ வாய்ப்பு மூலமாக நரீந்தருக்கு மீண்டும் களம் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தொடக்க சுற்றில்... 

இதர எடைப் பிரிவுகளில் களம் கண்ட இந்தியர்களான விகாஸ் (72 கிலோ), தீபக் (77 கிலோ) ஆகியோர் 2-வது சுற்றில் வெளியேற, அனுப் (55 கிலோ), விகாஸ் (60 கிலோ), அனில் (63 கிலோ), தீபக் (67 கிலோ), சோனு (87 கிலோ), பர்வேஷ் (130 கிலோ) ஆகியோர் தொடக்க சுற்றிலேயே தோல்வி கண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து