முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஆண்கள் ஒற்றையர் இறுதியில் சுவரேவ், ஆந்த்ரே பலப்பரீட்சை

ஞாயிற்றுக்கிழமை, 22 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சின்சினாட்டி: சின்சினாட்டி ஓபன் டென்னிஸில் ஆடவர் பிரிவில் சுவரேவ் பெண்களில் ஒற்றையர் பிரிவில் ஆஸ்லே பார்டி, ஜில்டெச்மேன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர். இறுதிப் போட்டியில் அவர் ஆந்த்ரே ரூப்லேவாவை எதிர்கொள்கிறார்.

சிட்சிபாசை... 

அமெரிக்காவில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதி ஆட்டம் ஒன்றில் 2-வது வரிசையில் உள்ள சிட்சிபாஸ் (கிரீஸ்) - அலெக்சாண்டர் சுவரேவ் மோதினார்கள். இதில் 3-வது வரிசையில் உள்ள சுவரேவ் 6-4, 3-6, 7-6, (7-4) என்ற செட் கணக்கில் சிட்சிபாசை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

ஆந்த்ரே ரூப்லே...

அவர் இறுதி ஆட்டத்தில் ரஷியாவை சேர்ந்த ஆந்த்ரே ரூப்லேவை சந்திக்கிறார். இந்த போட்டியில் 4-வது வரிசையில் உள்ள ரூப்லேவ் அரை இறுதியில் 2-6, 6-3, 6-3 என்ற கணக்கில் முதல் நிலை வீரரான டேனில் மெட்வதேவை (ரஷியா) அதிர்ச்சிகரமாக வீழ்த்தினார்.

பெண்கள் இறுதி...

பெண்கள் பிரிவு இறுதி ஆட்டத்தில் முதல்நிலை வீராங்கனையான ஆஸ்லே பார்டி (ஆஸ்திரேலியா)- ஜில்டெச்மேன் (சுவிட்சர்லாந்து) மோதுகிறார்கள்.

கால்இறுதி...

முன்னதாக நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ், 12-ம் நிலை வீரரான பாப்லோ காரெனோ பஸ்டாவை (ஸ்பெயின்) எதிர்கொண்டார். 54 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் மெட்விடேவ் 6-1, 6-1 என்ற நேர்செட்டில் காரெனோ பஸ்டாவை ஊதித்தள்ளி அரைஇறுதிக்கு முன்னேறியதுடன், டோக்கியோ ஒலிம்பிக்கில் அவரிடம் கண்ட தோல்விக்கும் பதிலடி கொடுத்தார். முன்னதாக ரூப்லெவ் 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீரர் பெனோய்ட் பேர்ரை போராடி சாய்த்தார்.

சிட்சிபாஸ் வெற்றி

மற்றொரு கால்இறுதியில் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள சிட்சிபாஸ் (கிரீஸ்) 6-2, 5-7, 6-1 என்ற செட் கணக்கில் 17-ம் நிலை வீரரான பெலிக்ஸ் அஜெர் அலியாசிம்மை (கனடா) தோற்கடித்து தொடர்ந்து 2-வது முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தார். இந்த ஆட்டம் 2 மணி 12 நிமிடம் நீடித்தது. 

அலெக்சாண்டர்... 

அரைஇறுதியில் சிட்சிபாஸ், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற அலெக்சாண்டர் ஸ்வெரேவுடன் (ஜெர்மனி) மோதுகிறார். தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் கால்இறுதியில் 6-1, 6-3 என்ற நேர்செட்டில் நார்வேயின் கேஸ்பர் ரூட்டை விரட்டியடித்தார்.

ஆஷ்லி பார்ட்டி... 

பெண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) 6-2, 6-4 என்ற நேர்செட்டில் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான பார்பரோ ஜிரெஜ்சிகோவாவை (செக்குடியரசு) வெளியேற்றி அரைஇறுதியை எட்டினார். 

ஏஞ்சலிக் கெர்பர்... 

அரைஇறுதியில் ஆஷ்லி பார்ட்டி, முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரை சந்திக்கிறார். கால்இறுதியில் ஏஞ்சலிக் கெர்பர் 6-3, 3-3 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது அவரை எதிர்த்து ஆடிய கிவிடோவா (செக்குடியரசு) வயிறு பிரச்சினை காரணமாக விலகியதால் அரைஇறுதிக்குள் நுழைந்தார்.

ஒலிம்பிக் சாம்பியன்...

இன்னொரு கால்இறுதியில் 76-ம் நிலை வீராங்கனையான ஜில் டீச்மான் (சுவிட்சர்லாந்து) 6-3, 6-2 என்ற நேர்செட்டில் டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியனும், தரவரிசையில் 11-வது இடத்தில் இருப்பவருமான சக நாட்டு வீராங்கனை பெலின்டா பென்சிச்சுக்கு அதிர்ச்சி அளித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.

பாலா படோசா... 

இதே போல் செக்குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவை எதிர்த்து ஆடிய ஸ்பெயின் வீராங்கனை பாலா படோசா 5-7, 0-2 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த நிலையில் வலது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகினார். இதனால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பிளிஸ்கோவா, அடுத்து அரைஇறுதியில் ஜில் டீச்மானுடன் மோதுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து