முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக தடகளம்: ஷைலிக்கு வெள்ளி

திங்கட்கிழமை, 23 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

கென்ய தலைநகர் நைரோபியில் 20 வயதுக்குட் பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில், பெண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஷைலி சிங் (வயது 17) வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். 

இந்த ஆண்டின் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா பெறும் மூன்றாவது பதக்கம் இதுவாகும்.  ஷைலி சிங்கின் தங்கப்பதக்க வாய்ப்பு 0.01 மீட்டர் வித்தியாசத்தில் நழுவியது. ஷைலி சிங் 6.59 மீட்டர் நீளம் தாண்டி இரண்டாவது இடத்தைப் பிடித்தார். அவரைவிட 0.01 மீட்டர் கூடுதலாக, அதாவது 6.60 மீட்டர் நீளம் தாண்டிய ஸ்வீடன் வீராங்கனை மஜா அஸ்காக் தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். உக்ரைன் வீராங்கனை மரியா ஹோரிலோவா வெண்கலம் வென்றார்.

புதிய சேர்மன் நியமனம் 

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்துள்ளனர், பெரும்பாலும் இவர்கள் கிரிக்கெட்டுக்கு எதிரி என்று நினைக்க, அவர்களோ அஜிஜூல்லா ஃபாசில் என்பவரை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய சேர்மனாக நியமித்துள்ளனர்.

தாலிபான்கள் ஆட்சியின் முதல் புது நியமனாகும் இது. இந்த அஜிஜூல்லா பாசில் ஏற்கெனவே ஆப்கான் கிரிக்கெட் வாரியத்தின் சேர்மனாக செப்டெம்பர் 2018 முதல் ஜூலை 2019 வரை பதவி வகித்துள்ளார். இனி வரும் தொடர்கள் பற்றி இவர் முடிவெடுப்பார் என்றும் ஆப்கானிஸ்தான் கிரிகெட்டை இவர் வழிநடத்துவார் என்றும் தாலிபான்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே பவுன்சர் - அணியில் இடம்

குல்ஷன் ஜா இதுவரை 2 உள்நாட்டுப் போட்டிகளில் மட்டும்தான் ஆடியுள்ளார். ஆனால் இந்த 2 போட்டிகளில் இவர் பந்து வீசிய விதம் அணித்தேர்வாளர்களை வாயைப் பிளக்க வைத்தது. குறிப்பாக அவர் வீசிய ஒரு பவுன்சர் தான் இத்தனைக்கும் காரணம். இதனையடுத்து நேபாள் கிரிக்கெட் அணிக்குள் குல்ஷன் ஜா சேர்க்கப்பட்டுள்ளார்.

நேபாளம், யுஎஸ், ஓமான் அளிகளுக்கு இடையிலான முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் குல்ஷன் ஜா சேர்க்கப்பட்டார். இந்த முத்தரப்பு தொடர் செப்டம்பர் 14 முதல் 20ம் தேதி வரை ஓமானில் நடக்கிறது. நேபாள் போலீஸ் கிளப் அணிக்காக 2 போட்டிகள் ஆடி அவர் தேர்வுக்குழுவின் கவனத்தை ஈர்த்துள்ளார் குல்ஷான் ஜா.

பாபத் ஆலம் புதிய சாதனை

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்து வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் பாபத் ஆலம் ஆட்டமிழக்காமல் 124 ரன்களை எடுத்து உள்ளார். இந்த போட்டியில், பாகிஸ்தான் அணியின் இடது கை ஆட்டக்காரரான பாபத் ஆலம் சதம் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.  

அவர் தனது 22வது இன்னிங்சில் 5வது சதம் அடித்து உள்ளார்.  இதனால், விரைவாக 5 சதங்கனை அடித்த வீரர் என்ற பெருமையை பெற்று, முன்னாள் கேப்டன் யூனிஸ் கான் சாதனையை முறியடித்து உள்ளார். இதற்கு முன், யூனிஸ் தனது 28வது இன்னிங்சில் 5வது சதம் அடித்து இருந்தது சாதனையாக இருந்தது.  அவருக்கு அடுத்து, சலீம் மாலிக்  (29வது இன்னிங்ஸ்) உள்ளார்.

பாண்ட்யாவுக்கு யோசனை

பந்து வீச்சில் முன்னதாக செயல்பட்டதுபோல் அவரால் செயல்பட முடியவில்லை. பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கில் மீண்டும் ஜொலிக்க ஹர்திக் பாண்ட்யா செய்ய வேணடும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் இடம் கேட்டபோது, அவர் கூறியதாவது.,

ஹர்திக் பாண்ட்யாவின் முக்கிய பிரச்சினை அவர் ஒல்லியாக இருப்பதுதான். அறுவை சிகிச்சைக்குப்பின் பந்து வீச்சால் கூடுதல் சுமையை அவரது உடலால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் ஹர்திக் பாண்ட்யா உடலை சற்று பருமனாக்க வேண்டும் என்று சல்மான் பட் தெரிவித்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து